காவிரிமைந்தன் 

அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!

இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன்.  மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.

உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.

சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!

வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்!  இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!

எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு.  வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!

புலவர் புலமைப்பித்தன்

  • ·         இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..

திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்!  கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்!  மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய்  நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!

பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்..  மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள்.  இதில் கவி விருந்தும் உண்டு!  நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!

தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..

நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..

எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”

பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு!  பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!

மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..

  • இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
    தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில்
    பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
    மெல்லெனஇட்டுவைத்தேன்
    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்டஎந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
    மண்ணில்பிறக்கையிலே
    எந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
    மண்ணில்பிறக்கையிலே
    பின்நல்லவராவதும்தீயவராவதும்
    அன்னைவளர்ப்பதிலேநான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட

    தூக்கமருந்தினைப்போன்றவை
    பெற்றவர்போற்றும்புகழுரைகள்
    நோய்தீர்க்கும்மருந்தினைப்போன்றவை
    கற்றவர்கூறும்அறிவுரைகள்
    கூறும்அறிவுரைகள்  (இந்தப்பச்சைக்கிளிக்கொரு)

ஆறுகரையில்அடங்கிநடந்திடில்
காடுவளம்பெறலாம்
தினம்நல்லநெறிகண்டுபிள்ளைவளர்ந்திடில்
நாடும்நலம்பெறலாம்

நான்ஆராரோஎன்றுதாலாட்ட
இன்னும்ஆராரோவந்துபாராட்ட

பாதைத்தவறியகால்கள்விரும்பிய
ஊர்சென்றுசேர்வதில்லை
நல்லபண்புத்தவறியபிள்ளையைப்பெற்றவள்
பேர்சொல்லிவாழ்வதில்லை

இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
தொட்டிலைக்கட்டிவைத்தேன்  அதில்
பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
மெல்லெனஇட்டுவைத்தேன்
நான்ஆராரோஎன்றுதாலாட்ட
இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..

பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்!  பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை!  நம்மையும்தான்!!

எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?

வாழ்க்கைக்கு விளக்கம்!  பயணத்திற்கு பாதை!  உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்!  சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்!  சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!

கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்!  கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்!   உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்!  இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!

http://www.youtube.com/watch?v=ApWApnJisy0
Intha pachai HD Song

 

காவிரிமைந்தன்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
 
 
அன்புடன் 
காவிரிமைந்தன் 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்…

  1. கடல்கடந்து வாழும் தமிழ்கவி, கண்ணதாசனுக்காகவே உயிர் வாழும் குறிக்கோள், பம்மல் கண்ணதாசன் பேரவையின் நிறுவனர், காவிரித் தண்ணீரைக் குடித்ததால் நினைத்த மாத்திரத்தில் கவியும், கட்டுரையும் எழுதும் புலமை, வாலிப வாலிக்காக புத்தகம் எழுதி வாலியால் புகழப்பட்டவர். கவியரசு மற்றும் வாலிப வாலி தவிர ‘பிற கவிஞர்களின் திரைப்படப் பாடல்களின் தொகுப்பு’ என்கிற சமீபத்திய படைப்பில் அனைத்துப் பாடலாசிரியர்களின் திறமையை நாளைய தலைமுறையினருக்கு எடுத்துக் காட்ட இருக்கிறார் என்பதை அறியும் போது ஆனந்தம் அடைகிறேன். 

    வானலைத் தமிழ் மூலம் வளைகுடாக்களிலும், தொலைக்காட்சிகளின் மூலம் கண்ணதாசன் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்த இவர், பெரும்பாலும் இணையத்தில் உலா வருவதில்லை என்பதே என் கருத்து. 

    ஒரு வாரத்திற்குள் நான்காவது படைப்பாக வல்லமையில் வெளிவரும் ‘பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்” மூலம், தொடர்ந்து தங்களது ஆக்கங்களை வல்லமை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கும் அருமைநண்பர் காவிரிமைந்தன் அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    “இந்த பச்சைத்தமிழ் மைந்தனுக்கொரு தொட்டிலை இணையத்தில் கட்டிவைப்போம்” என்று சொல்லி, வல்லமை படைப்பாளர்கள் குழுவோடு இணைந்த ‘கவிஞர் காவிரி மைந்தன்’ அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.  

     

  2. மிகவும் தாமதமாகவே இதனைப்பார்த்தேன்.கண்ணதாசன்,வாலி, புலமைபித்தன் என்று வரிசை கட்டி வரும் பதிவு. தொடருங்கள் பொற்கால பாடல்களின் பூக்கோலங்களை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *