கிரேசி மோகன்

DD-001-01
‘’தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த -தனதான’’
“சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்துTN_174656000000
சிலைஜா னகிக்கு -மணமாலை
இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
மறைதே சிகர்க்கு -பரிவான,
அவமா னமுற்று அரியே யெனக்கை
அணிசே லைவிட்டு-அவள்கூவ
சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
வளர்சே லைகொட்டி -அருள்வோனே
கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
குறமா தணைக்க -மயலேறி
கிழவே டமுற்று வருவே லவர்க்கு
முறைமா மசக்தி -அபிராமி
சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
வெகுநே சமுற்ற -முதியோனே
அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
வளர்யோ கநித்ரை -பெருமாளே”….
————————————————————-

பெருமாள் திருப்புகழ்….
‘’நாத விந்துக லாதி நமோ நம’’ மெட்டில்….

“ஏழு கொண்டல வாடா நமோ நமnarasimha-16-mayapur
ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

வாழும் பண்டரி நாதா நமோ நம
ஏழை சங்கட தீர்வே நமோ நம
ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
ராயர் கும்பிடு மூலா நமோ நம
வாயு அஞ்சனை சேயார் சிநேகித
ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
ஆதி யந்தமி லாதோய் நமோ நம
கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
தீர அன்பர்கள் பாடா னபாடது
ஏறும் அம்பல கோபா லகோகுல
கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

வீழ கம்பமு லாநா ரகேசரி
மீன மந்தர மாமே ருகூர்மவ
ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
பூமி மங்கையின் தாளா தபாரமும்
பாத கம்புரி கீழோர் கள்மேலுற
நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”….
—————————————————————————————–

பெருமாள் திருப்புகழ்….

Tamil-Daily-News-Paper_43825495244
‘’தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
தத்தன தனத்ததன -தனதான….’’

“கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்
சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
அச்சுத மயக்கமதின் -அசைவாலே

நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
பத்தென வுதித்தவனின் -பரலீலை

அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
சத்திய வழிக்குவர -அருள்வாயே
இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
சத்குரு முறைப்படி -வருவாயே

விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
திட்டிட இடைச்சிமணல் அப்புயி தழுக்குள்அவள்
சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”….
———————————————————————————————————————-

 படங்களுக்கு நன்றி:

https://www.google.co.in/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&espv=210&es_sm=93&tbm=isch&imgil=_S51SGfmBBPqkM%253A%253Bhttps%253A%252F%252Fencrypted-tbn1.gstatic.com%252Fimages%253Fq%253Dtbn%253AANd9GcQBJ4TT-xNhMdfVLJwgv5gYEwKTmY8mmG1KBSqXiUk0J95EPxrc%253B300%253B225%253BG4uy-9V0wf28-M%253Bhttp%25253A%25252F%25252Fwww.maalaimalar.com%25252F2012%25252F08%25252F17150048%25252Fthree-benefits-give-perumal-vr.html&source=iu&usg=__9owwvIA-U4o8U6-TL53SkpG_Nuc%3D&sa=X&ei=J776UvSlBc2hiQfp4YHADw&ved=0CDcQ9QEwAQ&biw=1366&bih=624#facrc=_&imgdii=_&imgrc=_S51SGfmBBPqkM%253A%3BG4uy-9V0wf28-M%3Bhttp%253A%252F%252Fmmimages.maalaimalar.com%252FArticles%252F2012%252FAug%252Fc8fcb411-c1d7-4797-907f-640c38763e43_S_secvpf.gif%3Bhttp%253A%252F%252Fwww.maalaimalar.com%252F2012%252F08%252F17150048%252Fthree-benefits-give-perumal-vr.html%3B300%3B225

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “திருமால் திருப்புகழ்…. (2)

  1. “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்” எனத் தொடங்கும் பாடலை
    “கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி” என்ற பாடல்மெட்டில் பாடலாம்.

  2. சகோதரி தேமொழி, ரொம்ப சரி….சந்தத்துக்கு சொந்தக்காரர் அருணகிரியார்….மந்தன் எனக்கு வந்தது அவர் கருணையருளால்….நன்றி ஊக்குவித்தமைக்கு….சகோதரன் கிரேசி மோகன்….

  3. சந்தம் சிந்திக் கொஞ்சும் அருமையான திருமால் திருப்புகழ்…
    பாராட்டுக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *