கிரேசி மோகன்
பெருமாள் திருப்புகழ்….

தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன -தனதான….
—————————————————————————————————————–
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
——————————————————————————–

lordlakshmiperumal

“ஒருகள்ளக் காதல் வாட்டிட வேடுவ
குறவள்ளிக் காக காட்டினில் மேவிடும்
சுரரில்லக் காவல் சூர்ப்பகை வேலவன் -முறைமாம
பலவெள்ளிக் காசு பார்ப்பினும் ஊழவன்
உனையள்ளிப் போக வீட்டிடை ஏகுமுன்
வரமள்ளித் தாராய் வாய்த்திட சோணையின் -ரமணேசdownload (2)

குரு,அய்யப் பாடு ஆக்கிடும் ஆணவ
மதையள்ளிப் போடும் சாக்கில்வி சாரணை
புரிவுள்ளத் தாழம் பூத்திடும் மாமெனும் -உபதேசம்
மனதுய்யப் ,பாதம் வீற்றிட மாதுபொன்
அலைவெள்ளப் பாலில் போட்டிடும் சேடனில்
அறிபள்ளிக் கார ,ப்ராட்டியர் சூழவந் -தருள்வாயே

முறைஅவ்வைப் பேதை கூட்டுடன் ஏகிட
இலைவில்வக் காரர் வீட்டினில் சேரவும்
தலைபெய்அத் தோளில் தூக்கிய வேழனுன் -சுடராழி
தனைகவ்வக் காதின் நாற்கர ஆடலில்
நகையள்ளித் தூவும் மேய்த்திடும் கோகுல
உறிநெய்யைப் பாலை ஆய்ச்சியர் ஏசிட -களவாடி

உறுகொள்ளைக் கார மூர்த்தியுன் லீலையை
தடைசெய்யத் தாம்பில் பூட்டிடு தாயவள்
உரலள்ளிப் போக வீழ்த்தினை மாமரம் -ஒருநாளில்
கருமல்லிப் பூவுன் காத்திர வாசனை
விரலுய்யத் தீயில் பார்த்தவுன் பாரதி
திருவல்லிக் கேணி பார்த்தனின் சாரதி -பெருமாளே”

 

 

படத்திற்கு நன்றி:

http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=1639&page=1

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமால் திருப்புகழ் (7)

  1. பிரமாதம். அவ்வையின் வேழம் இங்கு வரதன் காத்த வேழமாகிறது.வரதனோ பார்த்தசாரதியின் கோவிலில் எழுதருளியிருக்கிறான். இவனோ தாமோதரன். தீக்குள் விரலை வைத்தால்  நந்தலாலா  பாடிய பாரதிக்கும் அருளியவன். நான் புரிந்து கொண்டது இவ்வளவுதான்..அற்புதம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *