கிரேசி மோகன்

 

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்

 

தனத்தந்த தான தனத்தந்த தான
தனத்தந்த தான -தனதான….

—————————————————————————————————————————-

“நரைத்தெங்கும் சோகை எழக்கம்பு தேவை images (2)
விறைத்தங்கம் பாயில் -விழுநேரம்
அரைக்கண்ணும் மூட அவச்சங்கு ஊத
நடுச்சந்தி ஓலை -தனிலேகி

அரிச்சந்த்ர கானில் அடைத்துன்னை போவார்
அதற்கென்று வாடாய் -பரிகாரம்
இதற்குண்டு, வானை அடைக்கின்ற சோணை
சிவக்கன்று ராமன் -ரமணேசர்

உரைக்கின்ற நானார் வழிச்சென்று மீள
இடைக்கன்று மேய -குழலூதும்,
மயிற்கொண்டை சூடி மழைக்கென்று கோவர்
தனக்குன்று தாரி -அருள்வாயே

அரிச்சிந்தை சேயின் அழைக்கின்ற போது
வரக்கம்பம் வாழும் -நரசீயா
மணப்பெண்மை ஜாம்ப வதிக்கென்று கோயில்
திருத்தங்கல் மேவும் -பெருமாளே”

——————————————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://wikimapia.org

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமால் திருப்புகழ் (21)

  1. தலவரலாற்றைச் சொல்லும் சந்தக் கவிதை. இந்த அற்புதத்தை, ஆன்மிக ஆழத்தை மிக எளிதாக எழுதிய நண்பர் கிரேசி மோகன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *