வார ராசி பலன் 17.0314-23.03.14

காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.
ரிஷபம்: பணியில் இருப்பவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால்,புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் இந்த வாரம் கட்டட பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.கலைஞர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல் பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். சுய தொழில் புரிபவர்கள்
பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைபிடிக்க வேண்டாம்.
மிதுனம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். இந்த வாரம் மாணவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்க ளுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கைகூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. சுயதொழில் புரிபவர் க கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். கலைஞர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடகம்: மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது.
.
சிம்மம்: கலைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டால், நன்மைகள் பல உண்டு. இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப் பாக பணிபுரிதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல்,இருந்தாலே பாதி கவலை குறைந்து விடும். கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம்.
கன்னி: கலைஞர்கள் தாழ்வு மனப் பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால்,ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். வியாபாரி களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். சுயதொழில் புரிபவர் கள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாதவண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பொது வாழ்வில் இருப்பவர் களின் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.
துலாம்: பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளா மல் அளவாகப் பழகிவருவது நல்லது.. காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் மாண வர்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். கலைஞர்கள் இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் ஆரோக்கியமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்
.
விருச்சிகம்: கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் .சுறுசுறுப்புடன் திகழலாம் போட்டிகள்மூலம் உங்கள் திறமை வெளிப்படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகளின் தீவிரம் குறையும். இந்த வாரம் பொருளாதார சிரமங்கள் குறைவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் . முதியவர்கள் சிறு உடல் உபாதைகளால், கள் அவதிப்பட நேரிடும். .சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர்.
தனுசு: வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. ம ாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். கணக்கு வழக்கு துறைகளில் உள்ளவர்கள், சில சங்கடங்களை சமாளிக்க சந்திக்க நேர்ந்தாலும், தன் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் எவரையும் எடுத்தெறிந்து பேசாமலிருந்தால், மன அமைதி கெடாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை சற்று ஆறப் போடுங்கள். வீண் சிரமம் குறையும்.
மகரம்: இந்த வாரம் மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு வியாபாரிகள் கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம் . பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம்.. வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் . ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும்.
கும்பம்: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருந்தால் பொருளாதார இழப்புக்களைத் தவிர்த்து விடலாம். சோம்பலின்றி சுறுசுறுப்பாக பாடுபடும் கலைஞர்களை புகழ், அந்தஸ்து பதவி அனைத்தும் தேடிவரும். வியாபாரிகள் .எதிர்பர்த்த இடங்களிலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலசமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றபெண்கள் கடுமையாக உழைக்க நேரிடும்.
மீனம்: பெண்கள் முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும் . இந்த வாரம் வியா பா ரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும்.. மாணவர்கள்,கல்வித் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷ்யங்களில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள் ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வாருங்கள், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும்.

காயத்ரி பாலசுப்ரமணியன்

காயத்ரி பாலசுப்ரமணியன்

ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,
ஜோதிடர்,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண் 43, தரைதளம், தேவராஜ் நகர்,
இரண்டாவது பிரதான சாலை,
சோளிங்க நல்லூர், சென்னை-600119.

மின்னஞ்சல் முகவரி:
astrogayathri@gmail.com
gayabala_astro@yahoo.co.in
astrogayathri@rediffmail.com

http://www.vallamai.com/qa/11583/

Share

About the Author

காயத்ரி பாலசுப்ரமணியன்

has written 135 stories on this site.

ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் . திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism, ஜோதிடர், சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், எண் 43, தரைதளம், தேவராஜ் நகர், இரண்டாவது பிரதான சாலை, சோளிங்க நல்லூர், சென்னை-600119. மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com gayabala_astro@yahoo.co.in astrogayathri@rediffmail.com http://www.vallamai.com/qa/11583/

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.