நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

1

கவிஞர் காவிரி மைந்தன்

தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது.

தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. சங்க காலப் புலவர்களும் சளைக்காமல் இதுபற்றிப் பாடிக் குவித்துள்ளார்கள். அகவியல் சார்ந்த காதலில் உறவது தருவது இனிமையென்றால் பிரிவது தருவது கொடுமையன்றோ?

விதவிதமாக விளக்கங்கள், புதுவிதமான கற்பனைகள், கவிஞர்களுக்கு கைகொடுத்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கான வரவேற்பும் பொது மக்களிடம் என்றுமே குறைவதில்லை. அண்மையில் கவிஞர் யுகபாரதி அவர்களுடன் ஏற்பட்ட சத்திப்பின்போது.. கவிதை.. இலக்கியம் பற்றி உரையாடியபோது.. அவர் குறிப்பிட்ட சேதியில்தான் எத்தனை உண்மைகள் உறைந்திருந்தன தெரியுமா?

ஆம்.. இதுவரை.. உலகின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற இலக்கியங்கள் எவை தெரியுமா? Romance or Pathos அதாவது.. காதலின்பம் அல்லது சோகம் இவை தழுவி எழுதப்படாத எந்த ஒரு படைப்பும் அல்லது நூலும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்றார்.

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: வாலி
பாடியவர்: பி.சுசீலா

பாடலைப் பாடிய திருமதி.பி.சுசீலாவிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல். காதலில் பிரிவும் கூட துன்பமான இன்பமானது என்பதைச் சொல்லும் பாடல். மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உயர்ந்த மனிதன் பாடல் இது!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

  1. நிலாவும் கவிஞர் வாலியும் நிறைய இனியப் பாடல்கள் ஈன்றிருக்கிறார்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *