மக்கள் கேட்கும் கேள்விகள் (5)

1

பவள சங்கரி

தலையங்கம்

திப்பிற்குரிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு,

தங்கள் கட்சியைச் சார்ந்த, பல பொறுப்புகளில் இருந்த திரு யசுவந்த் சின்கா அவர்கள் என்ன தவறு செய்தார்? நாங்கள் அறிந்த வகையில் எதிர் கட்சிகளும் பாராட்டும் வகையிலேயே அவருடைய பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவர் தன்னுடைய தொகுதி மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ என்ன தவறு செய்தார் என்று புரியவில்லை. ஆறு ஆண்டுகளில் கட்சியை விட்டு அவரை நீக்கியிருக்கிறீர்களே? காங்கிரசு கட்சியிலிருந்து கட்சி மாறி வந்தவரை வேட்பாளராக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம்? இது போல கட்சி மாறி வருபவர்களை ஊக்குவிக்கும் தங்களால் ஊழலற்ற ஆட்சி எப்படி தர முடியும்? முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா?

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மக்கள் கேட்கும் கேள்விகள் (5)

  1. சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் இவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுப் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இவருக்கு டார்ஜிலிங் தொகுதி ஒதுக்கப்பட்டது. மே.வங்கத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லாத நிலையில் கூர்க்கா இயக்கமொன்றின் உதவியோடு இவர் வெற்றி பெற்றார். வயது முதிர்ச்சியினாலோ என்னவோ, இவரால் நன்கு பேசக்கூட முடியவில்லை. இந்த வயதில் மீண்டும் பதவிக்கு ஆசைப்படுவானேன்? இவரும் இவரைவிட வயதில் இளையவரான ப.சிதம்பரம் செய்ததைப் போல இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கலாமே. கட்சி மாறி வந்தவருக்கு பார்மர் தொகுதி ஒதுக்கப்பட்டதில் ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது. அங்கு காங்கிரசின் பலத்தைக் குறைக்க இந்த தந்திரம் பலிக்கும் என்ற நோக்கம் இருக்கிறது. பதவி ஆசை யாரை விட்டது. ஒரு கட்சியின் விருப்பம் இது என்றால், அனுபவமிக்க மூத்த தலைவர் அதனை அனுசரித்துப் போவதுதானே நல்லது. வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற முரளி மனோகர் ஜோஷி, அந்தத் தொகுதி மோடிக்கு என்றதும் அமைதியாக ஒதுங்கிவிடவில்லையா? ஏன் இந்தப் பிடிவாதம். கட்சியினால்தான் இவருக்குப் பெயரே தவிர, இவரது தனிப்பட்ட சாதனைகளினால் அல்ல. இனி ஒரு விதி செய்ய வேண்டும். 65 வயதுக்கு அதிகமானவர்கள் அரசியலில் எந்தப் பதவிக்கும் வருவது தடை செய்யப்பட வேண்டும். தாங்கள் ராஜ்நாத் சிங்கைக் குறை கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *