மக்கள் கேட்கும் கேள்விகள் (7)

1

பவள சங்கரி

தலையங்கம்

உயர்திரு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,

நம் குடியரசு இந்தியாவின் தேர்தல்களை விருப்பு வெறுப்பற்ற முறையில், எந்த ஒரு அமைப்பையும் சாராமல் நேர்மையாக நடத்தும் தங்களுடைய சமீபத்திய அறிவிப்பின்படி தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்பது எந்த வகையில் சரியாகும்? இது பற்றி சட்ட ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்களா? நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்றால் இத்தனை ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தவறான ஒன்றா? இப்படி தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களை திசை திருப்பிவிடாதா? அன்பளிப்பு அளித்து செய்திகள் வெளியிடக்கூடிய இந்த காலகட்டத்தில் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டு வெகு சில நாட்களுக்குள் இந்தியா முழுவதும் செய்தி சேகரித்து இவ்வளவு விரைவாக கருத்துக் கணிப்பை எப்படி வெளியிடமுடியும் என்ற ஐயம் வராதா? மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் தங்களைப் போன்றோரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லவா இருக்கவேண்டும்?

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மக்கள் கேட்கும் கேள்விகள் (7)

  1. உயர்திரு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,

    மக்களின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் கணிப்புகளை வெளியிடுவதை தடை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *