அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!

2

கவிஞர் காவிரி மைந்தன்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் – ரோஜாவின் ராஜா – கவியரசர் கண்ணதாசன் – டி.எம்.எஸ்.- பி.சுசீலா – எம்.எஸ்.விஸ்வநாதன் – சிவாஜி, வாணிஸ்ரீ

இன்பலஹரியில் நம் இதயம்தொடும் இன்னொரு காதல் பாடலிது! கவியரசர் கண்ணதாசனின் கற்பனைக் களஞ்சியத்தில் பூத்த பூவிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விரல்களில் வருடப்பட்ட திரையிசைப் பொக்கிஷமிது! ரோஜாவின் ராஜா என்கிற திரைப்படத்தில்.. டி.எம்.எஸ். பி.சுசீலா பாடிய பாடலுக்கு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வாணிஸ்ரீ நடிப்பில்..

மங்கல வார்த்தைகளை மழைபோல பொழிந்திருக்கும் கவிஞர், இயற்கையின்மடியில் வைத்து இதயங்களைத் தாலாட்டுகிறார்.

பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

பொற்காலப்பாடல்கள் என்று போற்றும் தமிழ்த்திரைக்குத் தன் முத்தான தமிழால் மோகனப் பண் பாடிவைத்திருக்கிறார்.

உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

இலக்கியத்தமிழையும் திரைத்தமிழாக்கித் தந்து கல்யாணத் தமிழ்ப்பாடல் பாடுகின்றார்! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடலாய் அது இன்னுமின்னும் காதினில் .. காதலைச்சொல்கிறது கேளுங்கள்!

தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

ஆன்மீகத்தின் அடிநாதம் தன் மனதில் எப்போதும் அலங்காரம் செய்வதனால்.. தேன்சிந்தும் காதல்பாடலிலும் தெள்ளுத்தமிழில் ஆண்டாள் வருகிறாள் பாருங்கள்..

கண்ணதாசனின் கவிதைக்கரும்பில் எந்தப்பக்கமும் இனிக்கவே செய்கிறது அதிலும் காதலைப்பிழியும்போது இதயத்தின் மென்மையும் அ்னுபவங்களின் அடர்த்தியும் சங்கமம் ஆகிறது.

பலர் கவிதை எழுதுகிறார்கள் சிலர் கவிதையாய் வாழ்கிறார்கள். வாழ்வையே கவிதையாக்கும் நோக்கம் கவிஞரின் வெற்றி!

எழுதும் எல்லாக் கவிதையும் இணையற்றவைகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை

ஏதேனும் ஒன்று நம்மை உரசிச் சென்று இதயத்தில் தீப்பிடிக்கச்செய்தால் போதும்.

கண்ணதாசனின் கவிதைகளோ அனைத்துமே இதயத்தைப் பற்றிக்கொள்கிறது!

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

 

அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

படம் : ரோஜாவின் ராஜா
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, வாணிஸ்ரீ

http://www.inbaminge.com/t/r/Rojavin%20Raja/Alangaram%20Kalaiyana.eng.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!

  1. உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
    இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ ///

    Sir, pl. correct
    உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோம்
    இல்லாயின் இல்லென்று வான் செல்லுவோம்

  2. பாடல் வரிகள்:- புரட்சிதாசன் (கண்ணதாசன் இல்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *