கிரேசி மோகன்

 krishna_india_authentic_by_lalitkr007

தான தன தானத் தான தன தானத்
தான தன தானத் -தனதான….

——————————————————————————————————————–

“ஞான வழி தேடிச் சோணை மலை நாடிப்

ஓவியம் : கிரேசி மோகன்
ஓவியம் : கிரேசி மோகன

போன ரம ணேசத் -தவராஜன்,
போல யம தூதப் பாச வலை மீளப்,
பாழும் உல கேகித் -தவியாது,
நானொ ழிவி சாரத் தால றிசி வாயத்
தேனொ ழுக, மாயப் -புலநாகம்
வாயு மிழு ஆலத் தாலு டலம் ரோகத்
தாலி டும யானத் -திடைசேரா,
மோன அனு பூதிக் கூட ருள வாஅக்
கோகு லமு லாவிப் -பசுமேய
பீலி மயில் சூடிப், பீத கமு ராசப்,
பீடு நடை யோடுக் -குழலூதி,
கானில் வெயி லேறப், ப்ராணி நலம் பேணக்,
கூடி உற வாடிப், -புவிவாழ்வில்
பால னுரு வாயப் பாக வத லீலைக்
காக, அவ தாரப் -பெருமாளே”
———————————————————————————————————

படத்திற்கு நன்றி :

 

http://lalitkr007.deviantart.com/art/krishna-india-authentic-104817999

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமால் திருப்புகழ் (57)

  1. சென்ற ஞாயிறு மதுரா குழந்தையையும் பிருந்தாவனததில் பாங்கே பிஹாரியையும் 
    குடும்பத்தோடு தரிசித்தேன்.வந்ததும் உங்களின் ஓவியத்தையும் திருப்புகழ் 
    காவியத்தையும் ரசித்தேன்.  உங்களின் கிரேசியும் என‌து கிரேசியும் ஒரே
    ரேஸில் பெருமாள் பணி நல்கிறது. அவனும் குதிரை  ரத ரேஸ்காரன் தானே.
    பணி தொடர வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *