கிரேசி மோகன்

———————————————
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

“கண்ணனை நெஞ்சே கருது”
—————————————————–

பாலுக்(கு) அழும்பாலன், பாவை களின்லோலன்,

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன், -மாலுக்குள்

எண்ணமாய்த் தோன்றி, இடைசாதி வந்தவன்,
கண்ணனை நெஞ்சே கருது….

பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள், -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….

அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
சொப்பனம் இவ்வுலக சாராம்சம், -அற்பநான்
எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
கண்ணனை நெஞ்சே கருது….

இதுநிஜமாய் ஆகும், அது பொய்யாய்ப் போகும்,
விதவிதமாய் எண்ணல் விடுத்து, -எதுவரினும்,
கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்துக்
கண்ணனை நெஞ்சே கருது….

எங்கரி என்றே இரணியன் கேளும்முன்,
அங்கொரு தூணில் அதிர்ந்தவன், -சங்கரி
அண்ணனை, ஆகாய வண்ணனை ஆனந்தக்
கண்ணனை நெஞ்சே கருது
———————————————————————-

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2012_06_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *