கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம் – செய்திகள்

0

கணினித்தமிழ் கற்போம்!! என்ற இலவசத் தமிழ் இணையப் பயிலரங்கினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக விசுவல் மீடியா நிறுவனமும், வி.எம். பவுண்டேசன் மற்றும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தமிழ் உலகம் அறக்கட்டளையும், இணைந்து கிருஷ்ணகிரி சாந்தி கல்யாண மண்டபத்தில் ஜூன் 25, 2011 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

வளர்ந்துவரும் கணினி யுகத்தில், கணினியை தமிழ் வழியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.  மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வங்கிக் கணக்குகளை இணைய வழியாக மேலாண்மை செய்யதல்.  மின்சாரக் கட்டணங்களை இணையம் வழியாக கட்டுதல் என எல்லா துறையிலும் கணினியும், இன்டர்நெட்டும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மக்கள் யாவரும் அறிந்துகொள்வதன் மூலம் இணைய (இன்டர்நெட்) உலகில் முதல்அடி எடுத்து வைக்க எல்லாரையும் அழைக்கின்றோம்.

இப்பயிலரங்கில் கலந்துகொள்வதன் மூலம் இன்டர் நெட், புதிய மின்னஞ்சல் துவக்கம், தமிழ்மென்பொருள்கள் (Software) பற்றிய ஒரு அறிமுகம், தமிழ் இணையத்தின் பயன்கள், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி, கம்ப்யூட்டரில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை, புதியதாக வலைப்பூ(Blogs) உருவாக்கம், வலைப்பூ வடிவமைப்பு, விர்ச்சுவல் மேப்பிங் (Virtual Mapping) முறையில் சங்க கால மனிதர்கள் மேற்கொண்ட கடல் வழி பயணம் பற்றிய ஒரு பார்வை, விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணப்பபடங்கள்,  இ-கவர்னன்ஸ் (e-Governance) என பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்காக…

பார்வையிழந்த மற்றும் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் கணினியில் எப்படி தமிழ் தட்டச்சு செய்வது என்பதையும், அவர்களும் மற்றவர்களைப் போல கணினியைக் கையாள சிறப்புப் பயிற்சியும் இந்தப் பயிலரங்கில் இடம்பெறவுள்ளது.  கிருஷ்ணகிரியில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இப்பயிலரங்கில் பயிற்சி அளிக்க கட்டற்ற மென்பொருள் (Open Source Software) ஆர்வலர் திரு.மா.சிவக்குமார், திரு.கவி செங்குட்டுவன், கடல் இயல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு மற்றும் முனைவர். துரை.மணிகண்டன், நெல்லை விண்மணி நிறுவனர் நாகமணி, முனைவர் திரு. சரவணன் மற்றும் விசுவல்மீடியா நிறுவனங்களின் செல்வ.முரளி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  இவற்றின் தொடக்க விழாவிற்கு உலகத்தமிழ் அறிஞர்கள் பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வீடியோ கான்பரன்ஸிங்க் (Video Conferencing) முறையில் பேசவிருக்கின்றனர்.  மேலும் இப்பயிலரங்கில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவ/மாணவியர்களுக்கு இலவச மென்பொருட்கள் அடங்கிய குருந்தகடும் வழங்கப்படும்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவல் மீடியா நிறுவனமும், விஎம் ஃபவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை ஆகியவை செய்துவருகின்றன.  ஆர்வமுள்ள யாவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *