பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் குரலும் வாழ்வும் ஒளிபரப்பு, மு.இளங்கோவன்

முனைவர் மு. இளங்கோவன்

தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், பாடலையும் பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

அன்புகூர்ந்து தாங்கள் பார்ப்பதுடன் தமிழர்கள் அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும் வேண்டுகின்றேன். அயலகத்தில் வாழ்பவர்கள் இணையம் வழியாக நேரலையாகப் பார்க்கமுடியும்.

http://tamiltv.tv/dd-podhigai-live/

இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கமுடியும்

பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசைப் பணி அறிமுகம் ஆகும் நாளும் நேரமும்

நாள்: 24.05. 2014 சனிக்கிழமை இந்திய நேரம் : முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை

நம் பண்படு மீட்க போராடியவரை நாம் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்

அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி

குறிப்பு: ப. சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் தயாராகிக்கொண்டுள்ளது. முழுமை பெற்றதும் தமிழர்களின் அரிய செல்வப்புதையல் பெற்ற மனநிறைவு அனைவருக்கும் உண்டாகும்.

மேலும் விவரங்கள் அறிய

http://muelangovan.blogspot.in/

முனைவர் மு.இளங்கோவன் Dr.Mu.Elangovan Assistant Professor of Tamil K. M. Centre for Postgraduate Studies, Government of Puducherry, Puducherry-605 008, India

செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

Share

About the Author

has written 225 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.