செய்திகள்

ஸ்ரீ சங்கரா டிவியில் – ஸ்ரீ சுக்த ஹோமம் – செய்திகள்

தென் இந்தியாவில் முதன் முறையாக ஆன்மீக தொலைக்காட்சி  ‘ஸ்ரீ சங்கரா டிவி’  யின் நிறுவனர்கள், நேயர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ‘ஸ்ரீ ஷாப்பி’ என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர்.  பல ஆன்மீகவாதிகளும் அறிவியலாளர்களும் இதன் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதன் துவக்கவிழா ஸ்ரீ சங்கரா டிவி யில் ஜூன் 26, 2011 அன்று மாலை 7 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.  இதில் பல ஆன்மீகவாதிகளும், அரசியல் மற்றும் சமுதாயப் பிரமுகர்களும்  கலந்துகொள்ளவிருகிறார்கள்.  இதையொட்டி மாலை 4 மணிக்கு பெங்களுரு மகாலட்சுமி கோவிலில் இருந்து ‘ஸ்ரீ சுக்த ஹோமம்’ நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.  ஜூன் 26, 2011, அன்று ஸ்ரீ சங்கரா டிவி யில் கேட்கப்படும் ஆன்மீக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் நேயர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

 

Share

Comment here