கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்

0

-வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்

 

tagore

 

செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப் பிராமணர்
பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.

வையகம் போற்றும் காவியக் கவியோகிக்குக்
கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.
கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
வல்லமையோடு எட்டு வயதில் கவியடியெடுத்தார்.

கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
சொல் வளமுடைக் கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
காவியக் கம்பர், வியாசருக்கடுத்து ஏராளமாகத்
தூவினாராம் அறுபது ஆண்டுகளென்பது கணிப்பு.

பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்!

வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியைப்
பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.

கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
நாட்டமுடன் இசையும் அமைத்தார் – இசைமேதையுமானார்.

மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.

1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
உருவானது முழுமையான இலக்கியப் பணி.

சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாயப் பிரதிநிதியானார்.
1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.

19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி.
ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.

பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
வரித்து ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
”அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது!

வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.

தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
இந்திரா காந்திக்கு ”  பிரியதர்சினி ”  யைச் சூட்டினார்.
தாகூர் காந்தியை மாபெரும் காவலனென்றார் (    )
அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!

ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்   
1915ல் பிரித்தானியா ’ செவ்வீரர்’ (     ) பட்டமளித்தது.
1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

(பிரியதர்சி – அமைதியான பார்வை.)

 

பதிவாசிரியரைப் பற்றி

0 thoughts on “கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்

  1. இந்தக் கவிதையில் வேதா குறிப்பிட்டுள்ள எனது கீதாஞ்சலிக் கீதத் தொகுப்பு இதுதான்;  வல்லமை வலையிதழில் உள்ளது.

    https://www.vallamai.com/?p=21166.

    யாவரும் படித்தின்புற தாகூரின் கீதாஞ்சலியை இத்துடன் இணைத்துள்ளேன்.

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *