என்ன கைம்மாறு செய்வேன்?

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

jay

 

கைம்மா றென்ன செய்வேன்,
அளவின்றி அளிக்கும்
இளவேந்தே!
கறை படாமல், அறிவிக்கப் படாமல்
உன் கருஞ் சிவப்பு
பொன்னிதயத்தை
வீட்டு மதில் கட்கு வெளியே
வைத்திருக்கிறாய்!

எதிர்பாராத உன் பரிசுகளை எல்லாம்
அள்ளிக் கொள்ளலாம்,
அல்லது தொடாமல் நீங்கலாம்!
நன்றி கெட்டு
ஒன்றிலும் ஒட்டா துள்ளேனா?
உயர்ந்த பரிசு களுக்கு நான்
உனக் கெதுவும் அளிக்க வில்லையா ?

அப்படி யில்லை, ஆனால்
ஒதுங்கவு மில்லை!
அளித்தது மிக மலிவானது!
கடவுளைக் கேள், அவர் அறிவார்!

கண்ணீர் அடிக்கடிச் சிந்தி
வண்ணங்கள் இழந்த என் வாழ்வு
மரண நிலைக்கு வெளுக்கும்!

உன் தலைக்குத்
தலை யணை யாய் வைத்திட,
உடம்பு வடிவாக வில்லை,

முன்னேறிச் செல் நீ,
உன் மிதிப்பு மெத்தை யாக
உதவட்டும்  அது!

********************

Poem -8

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

What can I give thee back, O liberal
And princely giver, who hast brought the gold
And purple of thine heart, unstained, untold,
And laid them on the outside of the wall
For such as I to take or leave withal,
In unexpected largesse? am I cold,
Ungrateful, that for these most manifold
High gifts, I render nothing back at all?
Not so; not cold,–but very poor instead.
Ask God who knows. For frequent tears have run
The colours from my life, and left so dead
And pale a stuff, it were not fitly done
To give the same as pillow to thy head.
Go farther! let it serve to trample on.

**************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *