எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் 

vaali1_1521227g

கண்ணதாசன் பாடல் கேட்டு
கையைக்கட்டி நின்ற வாலி
கட்டவிழ்த்து வந்து நின்று
கவிதைமழை பொழிந்து நின்றார்

வாலி பாடி நின்றபோது
போலிஅல்ல என்று சொல்லி
தோழ் கொடுத்து நின்றவரே
தோழமையில் கண்ண தாசன்

கண்ண தாசன் பாடலோடு
கைகுலுக்கி வாலி பாடல்
வண்ணமாக வந்த போதும்
வைரமாக நின்ற தங்கே

பக்தியோடு பாடி நின்றார்
பருவத்தார்க்கும் பாடி நின்றார்
நித்தமே நினிவில் நிற்க
தத்துவமும் பாடி வைத்தார்

வெற்றிலை போட்ட வாலி
வெற்றிகள் பலதைப் பெற்றார்
நெற்றியில் பொட்டு இன்றி
நின்றதே இல்லை நாளும்

மெட்டுக்காய் எழுதி நின்றார்
துட்டுக்காய் எழுதி நின்றார்
பொட்டுவைத்த நெற்றி ஓடு
பொறிபறக்க எழுதி நின்றார்

முருகன் பாடல் பாடிநின்று
முயன்றுவந்த வாலி நாளும்
அருமையான பாடல் தந்து
அமர்ந்துகொண்டார் உள்ளம் எல்லாம்

தெருவெலாம் வாலி பாடல்
தித்திப்பாய் ஒலிக்கும் போது
பெரு மனதோடு மக்கள்
பேணியே ஏற்று நின்றார்

வாலிநீ போட்ட வேலி
வரலாற்றில் நிற்கும் ஐயா
போலிநீ இல்லை ஐயா
பொங்கிடும் தமிழின் ஊற்று
ஊழியுன் பாட்டு நிற்கும்
உலகுளோர் மனதில் நிற்பாய்
வாலிபக் கவிஞ்ஞரே நீ
வையத்தில் என்றும் வாழ்வாய் !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாலி நீ போட்ட வேலி

  1. காவியக்கவிஞர் வாலியைப் பற்றி கவிதைதீட்டி அனுப்பிவைத்தீர்! ஏற்கனவே அனுப்பிய கவிதையின் மறு பதிவா என்றிருந்தேன்! வாலி பற்றிய உங்கள் கவிதை போகிற போக்கில் நீங்கள் ஜாலியாக எழுதியதோ?
    சொல்லப்போனால் உங்கள் பேனா புரண்டுபடுத்தால் அது கவிதை! சொக்கவைத்தால் அது அமுதம்! கற்பனைச்சிறகுகள் விரித்து மின்னஞ்சலில் தோன்றும் மின்னல்பூக்களை அனுப்பிவைக்கிறீர்! ஆனந்தம் பெறுகிறேன்!

    கற்பகம் படத்தில் அவன் கைவைத்தபின்னே கவிதைமகள் அவன்பின் நடந்தாளே! சொற்கோலம் அங்கே இசையோடு சேர்ந்து தேன்மாரிப் பொழிந்ததை யார் மறப்பார் இங்கே? கண்போன போக்கிலே பாடலைக் கேட்டோர் எல்லாம் இது கண்ணதாசன் பாடல் என்றே வாய்மொழிய.. அட.. தங்கத்தோடுதானே தன்பாடலை ஒப்பிட்டார்.. தகரத்தோடு அல்லவே என்று மனம் நிறைந்த கவிஞர்! அன்பே வா.. பாடல்முதல் காதலர்தினம் வரை அவர் வரைந்த பாடல்களின் சொர்க்கபுரி.. கலைஞரின் மனதைத் திருடிய கள்வன்! ஸ்ரீரங்கம்தந்த செல்வன்! காவியங்கள் பலவரைந்த நாயகன்! பாடல்களே பத்தாயிரத்திற்கும் மேலெழுதி படைப்பியலில் சரித்திரமே படைத்துவைத்தான்! உள்ளம் உருகுதய்யா பாடல்முதல் கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் பாடல் என பக்திப் பரவசத்திற்கு பஞ்சமில்லா வாலி! அவர் முதலாம் ஆண்டு நினைவுதினத்தில் (18.07.2014) உங்கள் கவியஞ்சலி ஆன்மாவிற்காக அர்ப்பணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *