Su. Ravi

This drawing of astronomer KEPLER JOHANNES by me is dedicated to Dr Sesha Srinivasan who contributed a detailed write up on the Astronomer in VALLAMAI.

We owe a lot to the German Astronomer who brought a paradigmn shift in the history of astronomy – identifying the orbital path of the heavenly bodies as elliptical.

For paarkka, rasikka…

572ACFBA-E85F-4DAE-9B56-A89F85168AE2

Su.Ravi

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “KEPLER, JOHANNES

  1. கெப்ளரை மிக அழகாக ஓவியம் வரைந்து அவ்வோவியத்தை எனக்கு சமர்ப்பணம் செய்துள்ள சு. ரவி  ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்
    சேஷா சீனிவாசன்

  2. Dear Sir, I want you to write a series on Great scientists, mathematicians, astronomers, philosophers…

    Su.Ravi

  3. அருமையான ஓவியம். நண்பன் சு.ரவியை இன்றுமுதல் “ஓவியக் கவிஞர்” சு.ரவி என்றே குறிப்பிடலஅம் என்று முன்மொழிகிறேன். வல்லமை இதழின் சார்பாக உரிமையோடு அவருக்கு “ஓவியக் கவிஞர்” பட்டத்தை மனமுவந்து வழங்குகின்றேன். வழங்கும் தகுதி எனக்குண்டோ இல்லையோ அது, “தரப்பட்டார் சால்பின் வரைத்து” . கே.ரவி

  4. Anbu NaNbanE Ravi

    Thanks for you warm recommendation.

    The debate in me whether I am an artist or poet goes on for ever..
    May be I am both or may be I am neither…. Whether painting or poetry or music
    I have always felt the job is done once the prasavam happens.. Ivaiyaavum en mUlam VeLippada vENdum enpathu AVAN viruppam enRE thOnRukiRathu.. MaRRapadi-

    ” பொருள்தேடி வாழாமல் பொழுதெலாம் வாழ்க்கைக்குப்
                    பொருந்துமோர் பொருள்தேடினேன்!
             பொன்தேடி அலையாமல் பெயர்பேறு விழையாமல்
                      புரியாமல் உனை நாடினேன்!”
    I share again my dilemma below:

    தூரிகை என்ற காரிகை  யோடு
    இணைபிரி யாமல் இழைந்த நாட்கள்.
    வண்ணங் களே என் எண்ணங் களாக
    வார்த்தைகள் இன்றி வாழ்ந்த தினங்கள்
    திடீரென் றொருதினம்,திரும்பிப் பார்த்தால்,
    கவிதைக் காதலி காத்திருந் தென்னிடம்
    கண்ணீ   ரோடு நியாயம் கேட்கிறாள்!
    “எதுகை, மோனை, சீர்,தளை, தொடை என
    எத்தனை அணிகள் பூட்டிநான் மிளிர்ந்தேன்!
    வெண்பா, விருத்தம்,, வித வித சந்தம்
    எனப்பல வடிவொடு வனப்புடன் ஒளிர்ந்தேன்!
    என்னொடு களித்த இனிய தினங்களை
    மறந்திடப் போமோ? மறுபடி எனை நீ
    மருவிட வாரா திருத்தல் தகுமோ?”

    கவிதைக் காதலி பெருக்கிய கண்ணீர்
    நெஞ்சில்  நெருப்பாய்ச் சுட்ட(து;)அதுமுதல்,
    வண்ணம், வடிவம், வரைதல் மறந்து
    கவிதாயி னியைக் கலந்து  மகிழ்ந்தேன்.
    மாதங்கள் நீண்ட காதங்க ளாயின!

    ஒருநாள் காலை உலவச் செல்கையில்,
    நீளப் பரந்த நீல வானத்தில்,
    பனித்துளி உறங்கும் பசும்புல் நுனியில்,
    மரங்கள் விரித்த மரகதப் பச்சையில்,
    பூக்கள்  சிரிக்கும் புதுவண்ணத்தில்
    ஓவியப் பெண்ணாள் ஒயிலாய் அழைக்கிறாள்!

    இத்தனை நாட்கள் இவளை மறந்து
    எப்படி இருந்தேன்?   ஈசா, இனிநான்
    ஒருநா  ளேனும்  ஓவியா இன்றி
    உறங்கிட மாட்டேன் என்றொரு துணிபுடன்
    விடுவிடு வென்று  வீடு திரும்பி
    தூரிகையா லொரு காகிதப் பரப்பில்
    கோடுகள், வளைவுகள் வண்ணங்களென்று
    ஓவிய உழவனாய், உழைக்கப் புகுந்தேன்
    எனக்குள் இருந்து ஒலித்தது ஒருகுரல்:

    ” உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
    ஓருபோ தவளே ஓவிய மானாள்.
    எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
    அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
    உன்விழியானாள்; உன்விரல் வழியே
    உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
    கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்
    கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!
    சிந்தனை என்ற ஆலயத்  துள்ளே
    மொழியெனும் பீடத் தமர்வாள்; வழிபடும்
    கவிதைப் பித்தர்தம் கணகளில் சரேலென்
    நொடிப் பொழு தளவில் மின்னலாய்த் தெரிவாள்
    எழுத்தும், வார்த்தையும் கழுத்தி லணிந்து
    அறிவெனும் மகுடமும், உணர்வெனும் ஆடையும்
    புனைந்து புதுப் புதுக் காவிய மென்னும்
    வாகனம் ஏறி வலம்வந்  திடுவாள்
    அருவியின் வீழ்ச்சியாய், அழகிய ஓடையாய்
    கட்டற்    றோடும்  காட்டாறு வெள்ளமாய்
    அமைதித் தென்றலாய் , அழிக்கும் புயலாய்
    எத்தனை வடிவெடுத் தாலும் உள்ளுறும்
    அனுபவமாவதும், , வெளிப்படும் கவிதையாய்
    யுகம்பல கடந்தும், படிப்பவர் நெஞ்சில்
    பரவசத் தீயைப் பற்ற வைப்பதும்
    பரா சக்தியின் செயலே உணர்வாய்!”

    ஓவியமாவதும் காவியமாவதும்
    உள்ளுறு சக்தியென் றுணர்ந்து மகிழ்ந்தேன்!

    Su.Ra

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *