மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை

5

— முனைவர்.பி.ஆர்..லட்சுமி.
பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்),எம்.ஏ.,(மொழியியல்),எம்ஃபில்.,டிஎல்பி.,(பிஜிடிசிஏ).,(எம்பிஏ)
தமிழ்த்துறை வல்லுநர்

 

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.

தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.

பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.

கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.
”பஃறுளி-…………………………………………
………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து
•    ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24
•    தாலமி—கி.பி.119-161
•    மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தாலமி இந்தக் குமரி முனையை ‘ புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.

”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள்  எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு”  (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே  திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature  and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும்  குறிப்பிடுகின்றனர்.

ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும்  கிடைத்துள்ளன.

அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர்  புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011)

விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.

செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.

கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.

tamil 1

கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன.  எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

tamil 2

சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம்  அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த  கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர்.  இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.

யோனாகுனி  தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.

இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.

ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .

tamil 3

மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல்  கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

tamil 4

கியூபா நாட்டு மாந்த உயிரியல்( Anthropology ) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.

இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும்.சுவடிகள் படிக்கவும்,கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை

  1. இந்த நல்ல கட்டுரையின் ஆசிரியர் முனைவர் லட்சுமியா, பொன்ராமா, இருவரும் ஒருவரேயாவா? இப்படிப் பட்ட கட்டுரைகளே தமிழுக்கும், தமிழ் மக்களின் சிந்தனைத் திறத்துக்கும் வளம் கூட்டும். பாராட்டுகள். கே.ரவி

  2. http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/  :  

    பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்.

    கால்பந்து ஒட்டுபோல்
    தையலிட்ட
    கடற் தளத்தின் மேல்
    கோல மிட்டு
    காலக் குமரி எல்லை வரைந்த
    வண்ணப் பீடங்கள்
    நாட்டியம் புரியும் !
    நண்டு போல் நகர்ந்து,
    கண்டத் தளங்கள்
    துண்டு துண்டாய்த் தவழும்
    கடல் சூழ்ந்திட !

    +++++++++++++

    கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

    1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப் படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்ப தாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

    பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

    ‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்று வோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

    ++++++++++++++++

    பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடுகளைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!

    ++++++++++

    ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

    டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

    ஒரு யுகத்தில் ஒன்றாய் இருந்த ஒற்றைக் கண்டம் பிரிந்து பல கண்டம் ஆனது

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!
    ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன

    வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடை வெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வட புறமாகச் சரிந்து கொண்டிருக் கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

    +++++++++++++++
    From:  http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

    R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:

    ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”,
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]

    சி. ஜெயபாரதன்.

  3. பாராட்டிற்கு நன்றி, எனது உண்மைப்பெயர் அச்சுப்பிழை காரணமாக வெளிவந்துவிட்டது.(புனைபெயர்-பொன்ராம்)
    லட்சுமி

  4. மிகவும் பயனுள்ள செய்திகளை வழங்கிய கட்டுரை ஆசிரியர் முனைவர்.பொன்ராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டத்தில் மேலும் பல தகவல்களை வழங்கி உள்ள திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.

    இந்திய மற்றும் தமிழக அரசுகள் இந்த ஆராய்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை எந்த அளவிற்கு வழங்கி வருகின்றன என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

    தகவல் அறிந்தவர்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி!

  5. பழமையான வணிகம் நடந்த வரைபடம் கிடைத்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்.பழைய பெயர்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கால வரையறையைச் சரியாக நிர்ணயம் செய்து தமிழ்மொழியின் பழமையை வெளிக்கொணரலாம்.தகவல் அறிந்தவர்கள் வெளிக்கொணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *