— கவிஞர் காவிரிமைந்தன்.

 

ayirathil oruvan

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்… மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டிய படங்களில் மகோன்னத படைப்பு – ஆயிரத்தில் ஒருவன்.  விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து வழங்கிய இசைச் சரித்திரத்தில் கடைசிப்பதிவு என்றும் இப்படம் அறியப்பட்டது.  திரு. பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் மாபெரும் சரித்திரப் படமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாடல்கள் Record Break! இன்றுவரை மட்டும் அல்ல.. என்றைக்கும் கேட்டு இன்புறத்தக்கவை!!  பாடல்களை பெரும்பாலும் கவிஞர் வாலி வழங்கியிருக்க மூன்று பாடல்களை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இயற்றியதாக அறிகிறோம்.

KANNADHASAN - VISWANATHAN - RAMAMOORTHYTMS

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் உருவான கதை ருசிகரமானது.  அதுவும் முக்கியமான ஒரு கட்டத்தில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக.. கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளத்திலிருந்தபடி கதாநாயகன் தோழர்களுடன் கூடி உற்சாகமாய் பாடுவதாக அமைய வேண்டும் என்ற இயக்குனரின் தேவைக்கேற்ப .. அந்த உற்சாக அலைகளை பிரதிபலிக்கும் வரிகளாய் பாடல் அமையாமல்.. கவிஞர் கண்ணதாசனிடம் தொலைபேசி வாயிலாக.. சூழலை விளக்கி.. அதற்கு அவர் உடனடியாக.. தொலைபேசியிலேயே வழங்கிய பாடல் இது என்பது இனிய செய்தியாகும்.

பாடலைப் பெற்று இசையமைப்பாளர்களிடம் கொடுத்த பின் கவிஞரிடம் கேட்ட கேள்வி ஒன்று – எப்படி இப்படி சட்டென்று ஒரு பொருத்தமான பல்லவி கருவானது?  கவிஞர் சொன்ன பதிலில் எத்தனை எதார்த்தங்கள்? எத்தனை இயல்பான வார்த்தைகள்?

ஆம்.. கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்கள் .. கடலில் பயணம்.. உற்சாகம் எழவேண்டும்.  கதாநாயகன் என்ன செய்வார்.. மேலே ஒரு கையைக் காட்டுவார்.. கீழே ஒரு கையைக் காட்டுவார்..

http://www.youtube.com/watch?v=12W01YmPf7I

காணொளி: http://www.youtube.com/watch?v=12W01YmPf7I

வரிகள்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *