இசைக்கவி ரமணன்

 

கனவிலே கண்ணன் (பாடல்)

 images (1)

 

கனவிலே கண்ணன்
நினைவிலே கண்ணன்
கனவும் நினைவும் கலந்து மயங்கும்
கவிதை யாவும் கண்ணன்
கனவும் நினைவும் கண்ணன்
கவிதை யாவும் கண்ணன்

தன்னை உருக்கிக் கரைந்து போகும்
தவத்தின் கனலில் கண்ணன்
தானில்லாத லஹரியில் வந்து
தழுவும் உறவு கண்ணன்
கவலை யாவும் கன்னியராகி
அவர்கள் நடுவில் கண்ணன்
திசைதொலைந்து திணறும்போது
தெருவின் முனையில் கண்ணன்

தவத்தின் கனலில் கண்ணன்
தழுவும் உறவு கண்ணன்
கவலை நடுவில் கண்ணன்
தெருவின் முனையில் கண்ணன்

சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
சுழலும் ஜோதி கண்ணன்
சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
தொடரும் மெளனம் கண்ணன்
எல்லை யாவும் தீர்ந்த போது
இன்னும் இன்னும் கண்ணன்
எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
இதய வாசன் கண்ணன்

சுழலும் ஜோதி கண்ணன்
தொடரும் மெளனம் கண்ணன்
இன்னும் இன்னும் கண்ணன்
இதய வாசன் கண்ணன்

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கனவிலே கண்ணன்

  1. கவலை யாவும் கன்னியராகி
    அவர்கள் நடுவில் கண்ணன்
    என் ரமணன் மட்டுமே இப்படி எழுத முடியும். கவலைகளைக் கூட கோபியர்களாக மாற்றி அவர்கள் நடுவில் கண்ணன் குதூகலமாக நடனமாடும் காட்சியை, இன்று, அதாவது, கண்ணன் திருவவதார நாளன்று தரிசிக்கச் செய்த ரமணனையும், வல்லமை இதழையும் வாழ்த்துகிறேன். கே.ரவி

  2. Dear Ramanan,

    Inimai, eLimai, Bakthi thathumbum aRputhamAna pAdal..
    Un NandalAlA pAdal Ingu pathivERi uLLathA?
    Illaiyenil padikka, kEtkka Asai..

    Su.Ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *