மேஜர்தாசனின் நூல் வெளியீட்டு விழா – செய்திகள்

சென்னை : 05 ஜூலை 2011.  மயிலாப்பூர், M.C.T.M. சிதம்பரம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின், திருமதி. சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் மாலை 6:20 மணிக்கு திரு. மேஜர்தாசன் அவர்கள் எழுதிய ‘சினிமா நிருபரின் டைரியிலிருந்து திரைச்சுவைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூல் வெளியிடுவதற்கு முன்னதாக, நூலில் அச்சு வடிவில் இடம் பெற்றுள்ள அரிய புகைப்படங்களின் திரைக்காட்சிகள் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டன.

குமுதம் இதழின் உரிமையாளர் முனைவர். ஜவஹர்பழனியப்பன் மற்றும் பூம்புகார் பதிப்பக நிறுவனர் திரு. எம். ஜே. பிரதாப்சிங் ஆகியேர் முன்னிலையில், கவிஞர் வாலி அவர்கள் நூலை வெளியிட, மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் தயாரிப்பாளர் திரு. ஏவி.எம். சரவணன் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.  மேலும் பல அன்றைய மற்றும் இன்றைய கலைஞர்களுக்கும் திரு. வாலி அவர்கள் இந்நூலினை வழங்கி கௌரவித்தார்.

விழாவின் தொகுப்பாளராக கவிஞர் திரு. பிறைசூடன் செயல்பட, இயக்குநர் திரு. எஸ். பி. முத்துராமன், திருமதி. மனோரமா, இயக்குநர் திரு. பாலுமகேந்திரா, தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் திரு. பாரதிராஜா, ‘பெப்சி’ தலைவர் திரு. வி.சி. குகநாதன் ஆகியோர் இந்நூல் பற்றிய தங்கள் கருத்துக்களை அழகாக எடுத்துரைத்தனர்.

திரளான பத்திரிகையாளர்களும், திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்களும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

சில காட்சிகள் இங்கே :

 

About the Author

has written 110 stories on this site.

எழுத்தாளர்