கவிஞர்  காவிரிமைந்தன்.

kamalahasan

 

அழகியல்தன்னைப் படம்பிடிக்க நினையாதோர் யார்? இயற்கையின் படைப்பினில்தான் எத்தனை எத்தனை அழகு? இயற்கையை ரசிக்காத கலைஞன் இருக்க முடியுமா? அவன் கவிஞனாகவும் முடியுமா? இந்தக் கலவையின் பிரதிபிம்பம் .. ஆம்.. இயற்கையையும் தன் காதலியையும் இணைத்து கவிதைநடைபயில எழுத்துவடிவம் தந்திருக்கிறார் கவிஞர் நேதாஜி.

GDevarajanஇசைவடிவம் தந்திருப்பவர் தேவராஜன். பாடியவர் உலக நாயகன் கமலஹாசன் என்பது மட்டுமல்ல.. அவர் பாடிய முதல் பாடல் என்பதும் இனிய சேதியாகும்.

இளமையின் வனப்பை எடுத்துக்காட்டி அதை இயற்கையில் நனைத்திடும் புதிய பாணி பல்லவியாய் துவங்குகிறது.

ஞாயிறு திங்களுடன் நடத்தும் பவனியிது. நாயகனின் உள்ளமெங்கும் ஊறித்திளைக்கும் அவன் நினைவுகள் நீராடிவரும் அழகைப் பாருங்கள்.. சரணங்களில்..

முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அந்தரங்கம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மிளிரும் நடிப்பில் இது ஒரு வெற்றிபெற்றப் பாடலாக…

http://youtu.be/ROaQotQM1FM
காணொளி: http://youtu.be/ROaQotQM1FM

 

திரைப் படம்: அந்தரங்கம்
பாடல்: கவிஞர் நேதாஜி
இசை: ஜி தேவராஜன்
குரல்: கமல்
நடிப்பு: கமல், தீபா
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
……………………………………………………………

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

மன்மதனும் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னாள்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிக

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *