நிர்வாண நேனோ செகண்ட்ஸ்- 7

1

ரிஷி ரவீந்திரன்

நாரணாபுரம். ரங்கராஜின் கிராமம். சிவகாசியிலிருந்து கிழக்கே இரண்டு மைல் தொலைவு.

கிருஷ்ணன் கோவில். திறந்த வெளி மைதானம்.  மடைப்பள்ளியையொட்டி ஒரு மேடை.  மேடையில் கோபால்ஜி பிரசங்கம்  ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த பட்டாபி ராமர் கோலத்திலிருக்கும் ராமரையும் சீதாப் பிராட்டியையும் வணங்கிவிட்டு…..

ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம ஹரே ஹரே….

ஹரே க்ருஷ்ண… ஹரே க்ருஷ்ண… க்ருஷ்ண……க்ருஷ்ண ஹரே ஹரே…..

ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம  ஹரே ஹரே….

ஹரே க்ருஷ்ண… ஹரே க்ருஷ்ண… க்ருஷ்ண……க்ருஷ்ண ஹரே ஹரே…..

என  ஆரம்பித்து…….

ஒரு கணம்  கூட்டத்தின் மீது பார்வையைச் செலுத்திவிட்டு மீண்டும் தொடரலானார்…..

காஷாய தண்ட கரஹாத்தி விபூஷி தாங்க:

வைராக்ய பாக்ய ஜலதே கருணா நிதேற்பம்

சம்சார  கோப பதி தஸ்ய ஸமாகுலஸ்ய

போதேந்த்ர தேவா மமதேஹீ கராவலம்ஹம்:

தர்மம்  பாகவதம் கலோ அதி சுகம்

என்று ஸ்லோகத்தை ராகத்துடன் பாடியபின்  சிறிது நிறுத்தி…. தன் உரை நடை உபன்யாசத்தினைத் தொடர்ந்தார்….

தர்மம் ரெண்டு விதமா இருக்கு ஒன்று வைதீக தர்மம் மற்றொன்று பாகவத தர்மம். வைதீக தர்மத்துக்கு வேதம் ஆதாரம்

ஆனால் இந்த வைதீக தர்மத்தை இன்றைக்கிருக்கக்கூடிய காலக் கட்டத்துல எல்லோராலயும் ஃபாலோ பண்ண முடியாத ஒரு ஸ்திதியில இருக்கோம்.

பெரிய விஷயங்களுக்குப் போகவேண்டாம்.

சூரிய உதயத்துக்கு முன்னால நாம  எழுந்து ஸ்நானம் பண்ணனும்றது  தர்மம். நாம முதல்ல சூர்ய உதயத்துக்கு முன்ன எழுந்திருக்கோமான்றதே கேள்வி தான்.

அந்தந்த தர்மங்கள அந்தந்த இடத்துல இன்னின்ன நியமத்ல இப்டித்தான் பண்ணனும்ன்னு நிர்ணயம் பண்ணி வச்சிருக்கா…

வைதீக தர்மத்தை வெளி நாடுகள்ளலாம் போயி பண்ண முடியாது.

கர்ம  பூம்யம் இமாம் ப்ராரப்த கர்தவ்யம் கர்மயத் சுபம்…. அப்டீன்றா ராமாயணத்ல

இந்த  பாரத பூமிதான் கர்ம பூமி. இந்த இடத்லதான் கர்மாக்களப் பண்ணனும் அப்டீன்னு சொல்றா

ஆனா பாகவத தர்மமோ எந்த தேசத்லயும் எந்த நேரத்லயும் எல்லோராலயும் பண்ணக் கூடிய ஒரு தர்மமா இருக்றதால அது ஒரு சுலபமான தர்மமா இருக்கு….

அந்த  பாகவத தர்மத்துக்கு எது  ஆதாரம் அப்டீன்னுட்டா…… வியாசர் அனுக்ரகம் பண்ணின ஸ்ரீமத் பாகவதம்ன்ற க்ரந்தம்தான் பாகவத தர்மத்துக்கு ஆதாரம்.

பாகவத தர்மம்ன்னா என்ன அப்டீன்னுட்டா…….

வெறும்  நாம ஜபத்தை பண்ணிண்டே இருந்தாக்கூட போறும்…. அதுதான் பாகவத  தர்மத்தோட ப்ராணன்.

அந்த  நாம ஜபத்தைக் கூட பெரிய  ஒரு நாமாவா சொல்லாம….. சுலபமா எல்லாராலயும் சொல்லக் கூடிய ஒரு நாமா ரெண்டே ரெண்டு எழுத்து….

ரா……ம…..

ராம நாமம் ஜபம் பண்றதுதான் ஸர்வ பாகவதத்துனுடைய ஸாரம்….அப்டீங்கறதுதான் மகான்களோட அபிப்ராயம்….

ராம நாமம் அப்டீங்கறது…. வேதத்தினுடைய ஸாரம்… இதிகாசத்தினுடைய ஸாரம்….புராணத்தினுடைய ஸாரம்…. அப்டீங்கறத நா(ன்) சொல்லல்லே…… ஸ்ம்ருதியே சொல்றது…..

என  ப்ரசங்கம் பண்ணிக் கொண்டிருக்க….. கூட்டம் பக்திப் பரவசத்தில் ஒரு வித லயத்தினில் ஆட் கொள்ளப் பட்டிருந்தது.

உரை முடியும் வரைக் காத்திருந்தான் ஐஐடி சிவா.

——————

எண்டமூரி வீரேந்திரநாத்

பிரபல ஆந்திர எழுத்தாளர்.

பிணக்காய் இருக்கும் கணக்கினை இணக்காய் மாற்றுவது எப்படி…? என்றொரு  பயிலரங்கத்தினை பள்ளிச்  சிறார்களுக்காக சிமோகாவில் நடத்திக் கொண்டிருந்தார்.

தேநீர்  இடைவேளையில் எட்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன்,          “அங்கிள் ! கணக்கிற்கும் புதிருக்கும் விடை காண முயலும் பொழுது  நம் மூளை மிகவும் ஷார்ஃபாய் வேலை செய்ய ஆரம்பிக்கும்னு சொன்னீங்கள்ள……. டீவி பாக்றதை விட கணக்குப் போட்றது ரொம்ப இண்ட்ரஸ்டிங்னு சொன்னீங்களே…. நிஜமா….?”

”இதிலென்ன சந்தேகம்…..?”

“அப்டீன்னா  என்னோட ரிடிலுக்கு பதில்  சொல்லுங்க….”

எண்டமூரி  வீரேந்திரநாத் ஒரு கணம் ஜெர்க்காகி, “ஓ… யெஸ்…..சொல்லு…” எனப் புன்னகைத்தார்.

”பூமத்தியரேகையை மையமா வச்சி பூமியை ஒரு  ரிப்பனால சுத்தினால் 40,000 கி.மீ ரிப்பன் தேவைப்படுதுன்னு வச்சிக்குவோம். இன்னொரு ரிப்பனால் ஒரு மீட்டர் உயரத்தில் அதே மாதிரி பூமியை சுத்திக் கட்டினால் இப்ப எவ்ளோ ரிப்பன் அதிகமா தேவைப்படும்….?”

சற்றும் தாமதியாது, ”ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேலே தேவைப்படும்” என்றார்.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான்.

“சப்போஸ்….ஒரு  எறும்பின் இடையில் இதே  மாதிரி ஒரு ரிப்பன் சுத்தி இதே மாதிரி ஒரு மீட்டர்  உயரத்தில் இன்னொரு ரிப்பனை  சுத்தினால் இப்போ….?”

“ம்…  கொஞ்சம் டைம் தேவை….. நான் கால்குலேட் பண்ணிச் சொல்லட்டா…?”

“ஓகே  அங்கிள்…. பை….”

விருந்தினர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே எண்டமூரி யோசிக்கலானார். சிறுவன் சொன்ன புதிரில் எதோ இருக்கின்றது. ஒரு காகிதத்தினையும் எழுது கோலையும் எடுத்து அந்தப் புதிரினை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

எறும்பின் இடையின் ஆரம்(radius) r மீட்டர் என்க.

எறும்பின் இடையின் சுற்றளவு 2πr மீட்டர்கள்.

இன்னொரு ரிப்பனால் ஒரு மீட்டர்  இடைவெளியில் கட்டினால் 2π(r+1) மீட்டர்.

இரண்டிற்குமுள்ள வேறுபாடு   = 2π(r+1) – 2πr

                                                                            = 2π

= 2 x 3.14

= 6.3 மீட்டர்கள் தோராயமாக.

ஓ…. மை காட்….! எதையுமே முற்சாய்வாய் (Prejudice) நினைத்து நாமே ஒரு முடிவிற்கு வந்துவிடுகின்றோம் பல தருணங்களில்…. இனி எப்பொழுதும் அறிவினை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்…

சிறுவனின் புத்தி சாதுர்யத்தினைக்  கண்டு மகிழ்ந்தார்.

                                                                      

ரங்கராஜின் வீட்டினில் யாரும் இல்லை. கோபால்ஜியையும் சிவாவையும் ஒரு அறையில் தங்க வைத்தார் பண்ணைப் பணியாள் ஒருவர். ரங்கராஜிற்கு நேர்ந்த நிகழ்வினை விளக்கிச் சொன்னார் பணியாள். தற்சமயம் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மருத்துவமனையில் அப்சர்வேசனில் இருப்பதாயும் இதயம் வேகமாய் அடிப்பதாயும் மருத்துவ அறிவியலில் இன்னதென்று புலப்படவில்லை எனவும் விளக்கிச் சொன்னார் பணியாள்.

”இந்த பேய் பிசாசு இதெல்லாமா இந்த விஞ்ஞான உலகில் இருக்கு….? இதெல்லாம் சுத்தப் பேத்தல்னு  நினைக்கிறேன் சுவாமிஜி…”  சிவா.

“எனக்குத் தெரிஞ்சி அவனுக்கு குண்டலினி  சக்தியானது எங்கேயோ ஸ்டக்  ஆய்டுத்து…..”

“அப்டீன்னா  என்ன சுவாமிஜி….?”

“ஒவ்வொரு  மனிதனுக்கும் குண்டலினி  சக்தியானது மூலாதாரத்தில்  தூங்கிக் கொண்டிருக்கின்றது…”

“மூலாதாரம்ன்னா…..?”

“நம்ம உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா…ன்னு ஏழு  சக்கரங்கள் இருக்கு. இது  சரியா வேலை செய்யாட்டி பல பிரச்சினைகள் வரும். ”

“சுவாமிஜி என் Bio-Mechanics துறையில் ஆராய்ச்சியில்  ஈடுபட்டபொழுது மருத்துவ அறிவியலையும் கற்க வேண்டியிருந்தது. நீங்கள் சொல்வது போல் மனித உடலில் அப்படியெல்லாம் ஒரு  சக்கரமும் இல்லை…. இதெல்லாம்  சுத்தப் பேத்தல்…. ”

”சக்கரம்ன்னா…. நீ நினைக்ற மாதிரி கிருஷ்ணர்  கையிலிருக்கும் சங்கு சக்கரத்திலிருக்கும்  சக்கரம் போன்று இருக்கும்ன்னு  நெனக்காதே… அது இருக்கும்  இடங்கள எனர்ஜி ட்ரான்ஸ்மிட்டர்கள்ன்னு சொல்லலாம்…”

”இதெல்லாம்  உடலில் எங்கே இருக்கு….?”

“கருவாய்க்கும்  எருவாய்க்கும் இடையே மூலாதாரம் இருக்குன்னு திருமூலர் சொல்றார்.”

“ஓ… அப்டீன்னா ஸ்பைனல் கார்ட்டோட முடிவில இருக்குமா….?”

”யெஸ்….”  என்று தலையாட்டினார் சுவாமிஜி.

”இந்த மூலாதாரச் சக்கரம்தான்  மிகவும் முக்கியமானது. இதில்  பிரச்சினைகள் ஏற்படும் பொழுது மனிதனின் வாழ்க்கை வளங்கள்  மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு அவன் நோய் வாய்ப்படுகின்றான்.”

நம்பாமல்  புன்னகைத்தான் சிவா…

“கடின உழைப்புக்கு ஈடு இணை  ஏதுமில்லை சுவாமிஜி…. கஷ்டப்பட்டு  உழைச்சா வாழ்க்கைல மேல  வரலாம்…. ”

“உழைக்றதுக்குரிய  மனோ திடமும் உடல் நலமும் குன்றிப் போய் விடும் இந்த சக்கரம் பாழானால். இதுவே  கருமையம் எனப்படும்…”

“கருமையம்ன்னா…..?”

அருகிலிருந்த  மேஜையின் மீதிருந்த ஒரு  ஆங்கில இதழினை எடுத்து, “இதோ பார்….. ஒரு மூலைக்கும் இன்னொரு  மூலைக்கும் கோடு வரஞ்சி…  அதே மாதிரி இன்னொரு சைட்லயும்  கோடு போட்டா இரண்டும் ஒரு  மையப் புள்ளியில் வெட்டிக்குமல்லவா…. அந்த இடத்தில் பென்சில் முனையால் இந்தப் புத்தகத்தினை நிறுத்தலாமல்லவா….?”

“இது Centre of Gravity ஐயா….”

“ஆனா  அதுவல்ல. இது சும்மா ஒரு  பிஸிக்கலுக்காக சொன்னேன். Specific Gravity ன்னு வச்சிக்கலாம்….”

“அதனாலென்ன…..?”

“இதுதான்  கருமையம். Bio-Genetic Centre. இங்கேதான் எல்லாமே ஏற்கெனவே நிரல்களாய் (Pre-Written Codes) எழுதப்பட்டிருக்கின்றன…. இதையே விதி என்கின்றனர்…..”

“விதின்னெல்லாம் ஒன்னும் இல்லை சுவாமிஜி…. எல்லாமே நிகழ்தகவுதான் Proability Theroy ஐ படிங்க சுவாமிஜி. இந்த Pre-Written Codes அது எப்டி நம்பறது…..? ”

“ம்ம்ம்…. நேரம் வரப்ப சொல்றேன். இப்போ உனக்கு இதெல்லாம் புரியாது. ரங்கராஜூக்கு அவசரமா இதயத்தில் குண்டலினியில் எனர்ஜி கன்ஜஷன் ஆய்ருக்கு. அதுதான் பிரச்சினைன்னு நினைக்கிறேன்.”

“அதெப்படி சுவாமிஜி….? எனர்ஜி கன்ஜஷன்னா 3 அடி உயரத்தில் அந்தரத்தில்  தூக்கியெறியப்பட முடியுமா…..?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. பாசத்தின் காரணமா கொஞ்சம் மேக்னிஃபை பண்ணி சொல்றாங்கன்னு நெனக்றேன்…. ஆனா குண்டலினியை சமன் படுத்தலேன்னா ஹார்ட் அட்டாக் வரும்…. இரத்த அழுத்தம் எகிறும்…. கிட்னி பாதிக்கும்…. தலை பாரமாகி ஒன்னுமே பண்ணமுடியாம…. தனக்கு என்ன நேர்ந்ததுன்னுகூட சொல்லத் தெரியாத ஒரு இனம்புரியா வலி ஏற்படும்… எல்லாம் முடக்கப்படும்….மருத்துவத்தால் இதனை கண்டுபிடிக்கவும் முடியாது…. சரி பண்ணவும் முடியாது…..”

”……………………………………………………………”

நீண்ட மெளனம்.

சுவாமிஜியின்  கையிலிருந்த புத்தகத்தினை வாங்கிப் பார்த்தான் சிவா.

JOURNAL OF PHYSICS

INSTITUTE OF PHYSICS, Bhubaneswar, Orissa, INDIA- 751005

Research Proposal on : Reduction of Time-Dependent Schrödinger Equations with Effective Mass to Stationary Schrödinger Equations

Author:   RENGARAJ SRINIVASAN என்றிருந்தது.

———-

டாக்டர் ராதாகிருஷ்ணன் எல்லா சோதனைகளையும் செய்து பார்த்து விட்டார். ஊஹூம்…. ஒன்றுமே புரியவில்லை. சில நேரங்களில் பல்ஸ் ரேட் 120 ஐத் தாண்டுகின்றது. சில நேரங்களில் சடேரென 60க்கும் கீழே குறைகின்றது. எமர்ஜென்ஸியின்பொழுது Pacemaker வைத்து Bradycardiaவின் உதவியுடன் சமாளிப்பதில் மிகவும் திக்கு முக்காட வேண்டியிருந்தது  இரவினில் ரங்கராஜிற்கும் டாக்டருக்கும் தூக்கம் இல்லை.

தான்  வரச் சொல்லிய மன நல மருத்துவர் எதிரே அமர்ந்திருந்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நோயாளியின் ஹிஸ்டரி சார்ட்டினை நீட்டினார். முதலில் ஒரு பேய் ரங்கராஜுக்குத் தெரிந்ததாயும், பின்னர் பூமியிலிருந்து 3 அடி உயரத்தில் தூக்கி எறியப்பட்டது வரை சொல்லி முடித்தார்.

பொறுமையாய்  கேட்டுக் கொண்டிருந்தார் மன நல மருத்துவர் டாக்டர் பால சுப்ரமணியன்.

“பேய் வந்தது சரி…. அதாவது ரங்கராஜின் கண்களுக்கு அப்படித் தெரிந்திருக்க  வாய்ப்பிருக்கின்றது. ஆனால்  அந்தரத்தில் 3 அடி உயரத்தில்  தூக்கியெறியப்பட்டது தான்  நம்ப முடியவில்லை….”

“பேய் மட்டும் எப்படி டாக்டர்….?”  ராதாகிருஷ்ணன்.

“சில  நேரங்களில் மனச் சோர்வு ஏற்படும் பொழுது மூளையிலிருக்கும் வேதிப் பொருட்கள் சம நிலை இழக்கின்றன. அப்பொழுது அவன் கண்களுக்கு பிம்பங்கள் தெரிகின்றன… .காதில் குரல்கள் கேட்கின்றன…..இதற்கு Schizophreniaன்னு பெயர். இப்படிப்பட்ட நோயாளிகளிடம் மணி என்ன…? எனக் கேட்டால் மிகவும் சீரியசாகத் தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு, “ராமசாமி” என்பார். தான் என்ன செய்கின்றோம் என்பதே தெரிவதில்லை…. இவர்களிடம் பரிவு காட்ட வேண்டும். தக்க சமயத்தில் மருத்துவ உதவியைத் தர வேண்டும். துரதிருஷ்டவசமாய் நம் தேசத்தில் யாருமே இதற்கு ஒப்புக் கொள்வதில்லை…. “என் பையனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னா சொல்றே…?” எனச் சண்டைக்கு வருவர். நோயாளியும் ஒத்துழைக்க மாட்டார். இதுதான் மிகப் பெரிய ஆபத்து……”

“ஹார்ட்டுக்கும் இதுக்கும் தொடர்பிருக்கா  சைக்யாட்ரிஸ்ட்….?”

“யெஸ்….. பயத்தினில் படபடப்பு ஏற்படும்…. அவர்களின் மூளையில் யாரோ குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பர். ரங்கராஜின் கேசில் நெகட்டிவ் சஜசன்ஸா அது இருக்கலாம்….ஆனால் அந்தரத்தில் 3 அடி தூக்கியெறிப்பட்டதுதான் நம்ப முடியவில்லை. அநேகமாய் கட்டுக் கதையாய் இருக்கலாம் என நினைக்கின்றேன்..”

“ஓ….. அப்படியானால் நாம் நெருங்கிவிட்டோம் சைக்யாட்ரிஸ்ட்….”

“முதலில் நான் பேஷண்ட்டை ஆராய வேண்டும்…..”

”ஓ… யெஸ்….” அழைத்துச் சென்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.”

மனநல  மருத்துவர் ரங்கராஜினைத் தனியறையில் ஆராய்ந்தார்.

கண்களை  ஆராய்ந்தார். நாக்கினை நீட்டச்  சொன்னார். பல கேள்விகளை எழுப்பினார் ரங்கராஜிடம். சில படங்களைக் காட்டி மனதினில் என்ன தோன்றுகின்றது எனக் கேட்டார்.

சோதனை முடிந்ததும் ரங்கராஜ் சென்றபின்  டாக்டர் ராதாகிருஷ்ணன், எதாவது தெரிந்ததா….? கண்டு பிடிச்சாச்சா…? என்ற தொணியினில் பார்வையைச் செலுத்த….

எல்லாம் நார்மலாய் இருப்பதாய்ச் சொன்னார் மன நல மருத்துவர்.

எதற்கும்  அவனது மன அலைகளை அப்சர்வேஷன்  செய்ய வேண்டும் எனக் கூறி Electro Encephologram இணைத்து ரங்கராஜினை 2 நாட்களுக்கு அப்சர்வேஷனில்  வைக்க ஆணையிட்டார்.

ரங்கராஜின்  தலை முழுதும் எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டன.

அருகிலிருந்த  மானிட்டரில் ஒரு புறம் ECGன் இதய அதிர்வலைகளும்  இன்னொரு புறம் அவனின் மன அலைச் சுழலினை EEGயினால் படம் பிடிக்கப்பட்டு இன்னொரு மானிட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.

இப்பொழுது டாக்டர் ரங்கராஜின் மன அலைகளை மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

Beta State. இனி Theta Stateல் மன அலையைப் பதிவு செய்ய  வேண்டும்.

ரங்கராஜினை  ஆழ் நிலை ஹிப்னாடிசத்திற்கு  அழைத்துச் சென்றார்.

”இப்பொழுது  நான் 100 லிருந்து 1 வரை எண்ணுவேன். ஒவ்வொரு எண்ணிக்கைக்கும்  நீ 20 முறை ஆழமாய்… முன்பிருந்த்தைவிட மிகவும் ஆழமாய் உள்ளே செல்கின்றாய்…..

100….   100….   100…

நீ  இப்பொழுது 20 முறை ஆழமாய் …  முன்பிருந்த்தைவிட மிகவும் ஆழமாய் உள்ளே செல்கின்றாய்….

முதல்முறை 100 எனச் சொல்லும் பொழுது ஒலிச்  செறிவு அதிகமாயும் பின்னர்  குறைந்தும் அதன் பின்னர்  காதில் கேட்டும் கேட்காததும் மாதிரியாக மிக மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

99….   99….   99…

நீ  இப்பொழுது 20 முறை ஆழமாய் …  ஆழமாய் உள்ளே செல்கின்றாய்….

50 ஐத்  தாண்டும் முன்னர் ரங்கராஜ்  ஆழ்ந்த நித்திரைக்குச்  சென்றான்.

உடனடியாய் ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துப்  பார்த்தார் டாக்டர் பாலசுப்ரமண்யன்.

ELECTROENCEPHALOGRAM REPORT    (EEG REPORT)

DATE OF TEST:  05/06/11

REQUESTED BY:  Dr. S.B.

EEG NUMBER:  703-0.

DISK:  A2.

PATIENT CLASSIFICATION:  Inpatient.

PATIENT NAME:                 RENGARAJ SRINIVASAN

CLINICAL FOR EEG:  Episodes of loss of consciousness.

PRESENT MEDICATIONS:  None.

INTRODUCTION:  This is a 21-channel digital, sleep deprived electroencephalogram, done according to the international 10/20 system of electrode placement with one channel EKG.  The records were obtained in the awake state, during drowsiness, and with photic stimulation, without hyperventilation.

DESCRIPTION OF RECORD:  The background consists of up to 6 hertz, up to 40 microvolts, theta activity.  There is no significant hemispherical asymmetry.  There are no seizure discharges.  Photic stimulation does not present any abnormalities.  Stage 2 sleep is not recorded, although the record does show drowsiness at times.  EKG shows regular rhythm.

IMPRESSION:  This is a normal electroencephalogram.

CLINICAL CORRELATION:  Normal electroencephalogram. No possibility of a seizure disorder.

எல்லாமே நார்மலாகவே இருக்கின்றன. ஒரு பிரச்சினையும் இல்லையே என டாக்டர் குழம்பிக் கொண்டிருந்தார்.

கோபால்ஜியும்  சிவாவும் மருத்துவமனைக்கு  வந்திருந்தனர். பாட்டியிடமும் தாத்தாவிடமும் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் பாலா, “ரங்கராஜ் நன்கு  தூங்கட்டும்… யாரும் டிஸ்டர்ப்  பண்ண வேண்டாம்….” எனக் கூறி விட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் டீ குடிக்க காண்டீனுக்குச் சென்று கொண்டே விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“எல்லாமே  நார்மல்னு சொல்றீங்க  டாக்டர். ஒரு வேலை ஹிஸ்டீரியாவா இருக்குமோ….?”

“நோ….”

“அப்போ  எப்டி அந்தரத்தில் தூக்கி எறியப்பட்டது….?”

“அது அவங்க  கட்டிவிட்ட கட்டுக் கதைன்னு  நினைக்கிறேன்….”

டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே  பாட்டி ஓவென அழுது கொண்டே இவர்களை நோக்கி ஓடி வர…..

டாக்டர்கள் இருவரும் ரங்கராஜ் அறையினை நோக்கி தட தடத்து..….. ரங்கராஜின் அறையினுள் நுழையும் வேளையில்-

ரங்கராஜின்  உடல் கட்டிலிலிருந்து அந்தரத்தில்  மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே சென்றது…….

தொடரும்…….

நன்றி….

Maharanyam H.H.Sri Sri Sri Murildhara Swamiji
குருஜி வேதாத்திரி மகரிஷி
குருஜி பிரம்மஸ்ரீ கோபால்ஜி.
நண்பர் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்திடம்(Yandamoori Veerendranath) இவரை ஒரு கதா பாத்திரமாக இக்கதையில் உலாவர அனுமதி கேட்டேன். உடனே எவ்வித மறுப்புமின்றி மிக்க மகிழ்ச்சியுடன் சரி சொல்லிய அந்த நல்லிதயம்.
எனக்கு ஆங்கிலத்தில் அறிவியல் சார்ந்த த்ரில்லர் கதைகளை எழுதுவது எப்படி என கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் பிரபல இயற்பியலாளரும் நாவலாசிரியமான Randy Ingermanson, USA.
ஐஐடி சிவா.
மனமென்னும் மேடை…. டாக்டர் ருத்ரன்
Mind Engineering  by Raveendran Krishnasamy

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்- 7

  1. Hello Sir,

    Story is very much interesting and ended with big thrilling. I wish story should not end very soon.

    Regards
    Suthakar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *