திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….

பவள சங்கரி

இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.

keeran

‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். அந்த வகையில் புலவர் கீரன் அவர்களின் துணைவியார் திருமதி செல்ல பாப்பா கீரன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். தற்போது அம்மையார் தம் மகனாருடன் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருக்கிறார். அம்மையாரைத் தொடர்புகொண்டு பேட்டி எடுத்தபோது 75 அகவையைக் கடந்தவரின் நினைவாற்றலும், எழுத்துத் திறனும் ஆச்சரியப்பட வைத்தன. இதோ அம்மையாரிடம் நாம் கேட்டிருந்த வினாக்களுக்கு அவர்கள் அளித்துள்ள விரிவான பதில்கள் அவர்தம் கையெழுத்து வடிவிலேயே காணலாம். புலவர் கீரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல நூல்கலை எழுதிக்கொண்டிருப்பவர். அம்மையார் அவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே படிக்கலாம்.

வினாக்கள்:

1. தங்கள் பெற்றோர் பற்றியும் அவர்கள் தமிழ் ஆர்வம் குறித்தும் கூறுங்கள்

2. இளம் வயதிலேயே தமிழிலும், இலக்கியத்திலும், எழுதாற்றலும், பேச்சார்வமும் ஏற்பட்டதா?

3. ஐயா உயர்திரு புலவர் கீரன் அவர்களுடனான காதல் வாழ்க்கைக்கு உங்கள் இலக்கிய பங்களிப்பு எந்த அளவில் இருந்தது?

4. தங்களுடைய எழுத்துப் பணிகள் பற்றி கூறுங்கள்

5. இலக்கியத்தில் தங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்கள். பிடித்ததற்கான காரணங்கள்

6. மகாபாரதம் மற்றும் வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவற்றில் தாங்கள் கண்ட வேறுபாடுகள்

7. கம்ப இராமாயணம் மற்றும் வால்மீகி இராமாயணம் ஆகியவற்றில் தாங்கள் காணும் வேறுபாடுகள் அல்லது சிலேடைகள் குறித்து கூற முடியுமா?

8. மூன்று தலைமுறைகளைக் கண்ட தங்களுடைய பார்வையில் சமுதாய மாற்றங்களும், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை முறைகளும் எவ்வாறு உள்ளது – மாற்றங்கள் தேவையென்றால் அது எந்த வகையில் வேண்டும்?

9. ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் தமிழில் ஏற்படுத்தியுள்ள எழுத்து மாற்றங்கள் குறித்த தங்கள் கருத்தை அறியத் தாருங்கள்.

10. இளம் தமிழ் ஆர்வலர்களுக்கு தாங்கள் சொல்லும் செய்தி.

11.தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்தும் தமிழ் சரியாக பேச முடியாமலோ அன்றி பேச விரும்பாமலோ இருக்கும் தமிழர்கள் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

mrs

திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களின் விடைகள்:

akee1

 

akee2

akee3

akee4

akee5

akee6

akee7

akee8

 

akee9

akee10

akee11

akee12

 

akee13

akee14

akee15

akee16

akee17

akee18

akee19

akee20

akee21

akee22

 

திரு. புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க : http://manoranjitam.wordpress.com/2012/02/25/pulavar-keeran-downloads/

About the Author

has written 1213 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

9 Comments on “திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….”

 • kavirimaindhan wrote on 6 December, 2014, 13:06

  எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. என்பதன் அர்த்தம்

  பவள சங்கரி அவர்களின் அமெரிக்க விஜயத்திலும்

  நற்றமிழ் சேவை நடம் புரிந்திட..  இஷ்டமுடன்…

  திருமதி கீரனார்தம் நேர்முகம் தருகின்றாரே…

  உயர்ந்த உங்கள் உள்ளம் நெடிது வாழ்க… வாழ்கவே…

  அன்புடன்..

  காவிரிமைந்தன்

 • Meenakshi Balganesh wrote on 6 December, 2014, 15:09

  Thank you very very much for publishing this interview. I am a great fan of Pulavar Keeran. As a young girl, I have listened to him once when he gave a series of talks on Ramayanam. Then he had come to our home and had lunch along with Smt. Chellapappa Keeran. Over the years I have collected all his talks that are commercially available and am looking for more to hear that ‘Simhak kural’ which delivers lovely chaste Tamil with clear diction and makes one spell-bound.
  Thanks, Ms. Pavala Shankari, once again for this great treat.
  Smt Keeran has also written her memoirs in Amudhasurabhi.

 • கீதா மதிவாணன் wrote on 7 December, 2014, 6:06

  மிகச்சிறப்பானதொரு முயற்சி. பவளசங்கரி அவர்களுக்கு நன்றி. திருமதி செல்ல பாப்பா கீரன் அவர்களுடைய அற்புதமான நேர்காணல் வழியே பல ஆழ்ந்த சிந்தனைகளையும் இலக்கியம் சார்ந்த அவருடைய பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வயதிலும் தெளிவான அழகான கையெழுத்து நாம் இழந்துகொண்டிருக்கும் கையெழுத்துகளின் மகிமையை உணர்த்துகிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும். 

 • s.vetrivelan wrote on 8 December, 2014, 13:24

  pulavar keeran avargalathu prasangam pala keetavan.ganeer kuralukkum azhntha karuthukkalukkum solnayathukkum anmeega sinthanaikkum potrappadupavar.avarathu sagotharar nthiru meenakshisundaram avargalum enathu thagappanarum ondraga station master aga panipurinthavargal enpathu koodathal eerpu,lalgudi asiriyayaga irunthalumkanavarin pulamaikkum satrum kuriyathavar avarthu thuniviyar.avarathu kanavarin oonathiyum thanathu tmil patral thangipidithavar.nall kaiezuhtum kondavar vazhga pallandu.

 • Jeyarama Sarma wrote on 10 December, 2014, 13:40

  நான் மதித்த , நேசித்த, தமிழ் இலக்கிய அறிஞ்ஞரும் , மிகச்சிறந்த பேச்சாளரும் ,,, புலவர்
  கீரன் ஆவார். அவரின் பேச்சில் புதுக் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கும்.அவரின் இடத்துக்கு
  இன்னும் யாரும் வரவில்லை என்றே சொல்லலாம்.அந்த அறிஞ்ஞர் அவையேறிப் பேச எழுத
  அனுதினமும் அருகிருந்து அனுசரணை வழங்கிய அவரின் அருமை மனைவியைச் சந்தித்ததோடு
  நின்று விடாமல் அவரிடம் எமக்கெல்லாம் கிடைக்காத பலவிடயங்களையும் வெளிக்கொணர்ந்த
  திருமதி பவள சங்கரி …. உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.பிரயாணங்களைப் பயன்
  உடையதாக்கிய உங்களின் சிந்தனைக்கு மீண்டும் ஒரு பாராட்டு! இப்படியான பணிகள் தொடர
  எனது வாழ்த்துக்கள்.
    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண்.

 • சச்சிதானந்தம் wrote on 14 December, 2014, 22:17

  ஒவ்வொரு கேள்விக்கும் தனது சிந்தனைகளைப் போலவே தெளிவான கையெழுத்து மூலம், மிகவும் இரசனையுடன் பதில்களை வழங்கி இருக்கும் அம்மையாருக்கு என் பணிவான வணக்கங்கள்.

  சிறந்த கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்டு, இலக்கியச் சுவை மிகுந்த பதில்களைப் பெற்றுத் தந்துள்ள ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி!

 • Srinivasan wrote on 7 August, 2015, 12:19

  Nandri Amma,
  Namaskaram.
  Thank you.
  Anbudan,
  Srinivasan.
  Perth, Australia.

 • ஆர்யத்தமிழன் wrote on 27 November, 2016, 19:51

  புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள் எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்தவன் அடியேன் , சமீபகாக கீரன் ஒரு சகாப்தம் என்னும் நூலையும் வாசித்தேன் , திருமதி கீரன் அவர்களை தொடர்பு கொள்ள முகவரியை தெரிவித்தால் மிக்க நன்றியுடையவனாவேன்

 • editor wrote on 28 November, 2016, 13:36

  manikeeran@gmail.com வணக்கம். இது திருமதி செல்லபாப்பா கீரன் அம்மையாரின் புதல்வரின் மின்னஞ்சல் முகவரி. அம்மையார் பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுவதாக அறிகிறேன். அவருடைய மகனிடம் தொடர்புகொண்டு அவர்தம் முகவரி அறியலாம். நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.