அப்துல் வதூத்

images (2)
இன்றுதான்
அது நடந்தது

கரையெல்லாம்
கடல்!
கடலெல்லாம்
உடல்!

எப்போதும்
ஆர்பரிக்கும் அலைகடல்!
இன்று
உயிர்பறித்த கொலைக்கடல்!
காலில் விழுந்த அலைகள்
காலைச்சுற்றிய பாம்பானதே
காலையில்!

பிணங்களின் மீது அலைகள்
போர்த்தியது வெள்ளைத்துணி!

தலைவர்கள் சமாதி!
மீண்டும்
தண்ணீரில் சமாதி!
ஓ! இறப்பிலும் புதுப்பிப்பு
இவர்களுக்குத்தானா?
“செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!”

ஏற்றத்தாழ்வு இருக்குமா
இறப்பில்?
மரணம் வந்தால் எல்லோருக்கும்
6 அடி தானே
இவர்களுக்கு மட்டுமேன்
50 அடியில் வந்தது..!?
இயற்கைக்கும் உண்டோ
முரண்பாட்டில் உடன்பாடு!

கடலே!
ஏனிந்த பெருங்கோபம்?
உன்னிடம்
முத்துக்குளித்தற்காகவா
எங்களை
செத்துக்குவித்தாய்
ஆழியே!
உன்னிடம்
சங்கு எடுத்ததற்க்க்காகவா
எங்கள் சங்கருத்தாய்?
உன் மீன்களை தரையில்
குவித்ததற்காகவா
எங்கள் பிணங்களை கரையில்
குவித்தாய்?
பாற்கடலே! நீ
அளிக்க தோன்றியவையன்றி
அழிக்க தோன்றவில்லை!

இனிய இயற்கையே!
மனிதனால் உனக்கு
நிறைய இழப்பு!
உன்னால் மனிதனுக்கு
நிறைய இறப்பு!
அதற்காக வேண்டாம்
இப்படி
சுனாமி ‘ செட்டில்மெண்ட்!’

இதுகேள் மனிதா!
உயிரினங்களிலேயே
நீ ‘பெரும்புள்ளி’ தான்
ஆனால்
இயற்கைக்கு முன்
நீ ‘வெரும்புள்ளியே’

“என் வளங்களை அழிக்காதே!”
இது சுனாமி வழியே
இயற்கை உனக்கு
சாவால் விட்ட சவால்!

(இந்த கொடூரம் நிகழ்ந்த போது திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் தான் இருந்தேன்.ஆழிப்பேரலையின் நாக்கு இன்னும் 200 மீட்டர் நீண்டிருந்தால் கூட என்னையும் அள்ளிக்கொண்டோடிருக்கும்.பத்தாண்டுகள் கடந்தும் பதைபதைக்க வைத்த அனுபவங்களைத்தான் இங்கே பதிவுசெய்திருக்கிறேன்.)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சென்னை சுனாமி !

  1. சுனாமியின் கோர விளைவுகள்.

    காலக் குயவனின் மேளமிது! கோணிக்
    கைகள் வார்த்துள்ள கோளமிது!
    கடலில் மிதக்கும் கொட்டையிது! மையக்
    கருவில் வெடித்துக் கொப்பரையில்
    கடல் மதிலால் தாக்கும் ஞாலமிது!
     
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40412301&format=html  

    இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலில் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்த வரலாற்றுப் புகழ் படைத்த பூம்புகார் என்னும் காவிப்பூம் பட்டினம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் கடல் பொங்கி அழிந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது! அதுபோன்று 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூத அலை மதில்கள் 9.0 ரிக்டர் அளவில் இந்தோனிசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலடியில் நில நடுக்க மையம் கொண்டு [Earthquake Epicenter] நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத சமயத்தில், எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு மின்றி 2004 டிசம்பர் 26 ஆம் தேதி தலைநீட்டி ஆயிரக்கணக்கான மக்களைத் தாக்கி மரணம் உண்டாக்கி இருக்கிறது. தெற்காசியாவில் பதினொரு நாடுகளில் இதுவரை (டிசம்பர் 29) 80,000 பேர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.

    கடந்த பல நூற்றாண்டுகளில் இது போன்ற ஓர் அசுரச் சுனாமி ஒன்று 9.0 ரிக்டர் அளவில் கடல் அடித்தளத்தில் பூகம்பத்தை உண்டாக்கி, அதிர்ச்சி அலைக் குமிழி ஒன்று எழுந்து பூத வடிவம் அடைந்து, எட்டுத் திக்கும் பரவி பல நாடுகளை ஒரே சமயத்தில் தாக்கியது வரலாறுகளில் காண முடியாது! கிழக்கிந்தியக் கடற்கரைப் பகுதிகளான சென்னை, ஆந்திரா, ஒரிஸா ஆகிய பரப்புகள் தாக்கப் பட்டாலும், நல்ல வேளையாக கல்பாக்கம் அணுவியல் ஆராய்ச்சித் தளங்கள் கடல் வெள்ளத்தால் உடைபட்டுக் கதிரியக்கப் பாதிப்புகள் நேராமல் தப்பிக் கொண்டன! பதினொரு நாடுகளைப் பயங்கரமாகத் தாக்கிய சுனாமியின் வலுவைக் கணிக்கும் போது, சுமாத்திரா பூகம்பம் சுமார் பத்து அணுகுண்டுகளைக் கடலடியில் வெடித்த ஆற்றலுக்குச் சமமானது என்று விஞ்ஞானிகளால் அனுமானிக்கப் படுகிறது!

    சி. ஜெயபாரதன், கனடா

  2. தெற்காசியக் கடற்கரைப் பகுதியில் சுனாமி பேரலை அடிப்பால் உயிரிழந்தோர் தொகை சுமார் 230,000 என்று அறியப் படுகிறது.  

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *