பவள சங்கரி

வல்லமை

இனிமையான 2014ம் ஆண்டை வாழ்த்தி விடைகொடுத்து வளமான 2015ம் ஆண்டை வேண்டி வரவேற்போம்!

‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு – சொல்லடி சிவசக்தி’ என்ற மகாகவி பாரதியின் உள்ளார்ந்த வேண்டுதலுக்கு ஏற்ப தங்களுடைய வல்லமைகள் மூலமாக நம் ‘வல்லமை’ இதழை அடுத்த உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ள அனைத்து நல்லிதயங்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த பாராட்டுகள். வெற்றிகரமான பல படைப்பாளர்களை உருவாக்கும் விதமாக நம் வல்லமை இதழில், கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட புத்தக மதிப்புரை போட்டி – https://www.vallamai.com/?p=41898 , திருமதி தேமொழி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘கடித இலக்கியப் போட்டி’ – https://www.vallamai.com/?p=44563 மற்றும் கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ – https://www.vallamai.com/?p=47553 என்ற கட்டுரைப்போட்டியும், இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து அற்புதமாகத் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ள, தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன், பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் மற்றும் மாபெரும் பேச்சாளரும், கவிஞருமான, முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) ஆகியோரின் தன்னலமற்ற பங்களிப்பினால் தம் இலக்கியப் பணியில் நம் வல்லமை இதழ் அடுத்த உச்சத்தை எட்ட முடிந்துள்ளது. நம் வல்லமை இதழில் தொடர்ந்து தங்கள் ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், ஓவியங்கள் என்று தொடர்ந்து அற்புதமான படைப்புகளை வழங்கி நம் வாசகர்களுக்கு இனிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கும், திரு கோதண்டராமன், விஞ்ஞான, இலக்கிய, நாடகப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் திரு ஜெயபாரதன், திரு. இன்னம்பூரான், திரு.இசைக்கவி ரமணன், திரு.கிரேசி மோகன், திரு. கேசவ், திரு சு.ரவி, திரு கே.ரவி, திரு. திவாகர், திருமதி விசாலம், திரு. மாதவன் இளங்கோ, திருமதி. சுபாஷிணி டிரெம்மெல், திருமதி மேகலா, திருமதி தேமொழி, திரு தமிழ்த்தேனீ, திரு செண்பக ஜெகதீசன், கவிஞர் காவிரிமைந்தன், திரு ரிஷான் ஷெரீப், திரு சத்தியமணி, திருமதி. சுபாஷிணி திருமலை, திரு சுதாகர் செல்லதுரை, திரு வினைதீர்த்தான், திரு. கோபாலன், திரு அமீர், திரு பழமைபேசி மற்றும் ஏனைய பல படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

வல்லமை இதழை செவ்வனே நடத்தும் விதமாக, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் பொன்னான நேரத்தை வழங்கி, அரும்பணியாற்றி வரும் திருமதி தேமொழி, திருமதி மேகலா மற்றும் திருமதி பர்வதவர்தினி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அனைத்திற்கும் மேலாக நம் அனைத்துப் படைப்பாளர்களையும் உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து மேலும், மேலும் சாதனை படைக்கத் தூண்டும் அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி வரப்போகும் நாட்களிலும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடியிருக்கிறோம். நம் வல்லமையின் வழங்கி நிர்வாகி, திரு. ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ், தள மேலாளர், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் , திரு. காமேஷ், திரு. செல்வ முரளி, ஆலோசகர்கள், திரு. இன்னம்பூரான், திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன், திரு. விஜய திருவேங்கடம் மற்றும் திரு. விசாகப்பட்டினம் வெ. திவாகர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நன்றி! நன்றி! நன்றி!

  1. அன்புடனே ஈடுபடும் எந்தவொரு செயலும்
    அகிலத்தை வெற்றி கொள்ளும்!
    அறிவுடனே அதைநாளும் பேணுகின்ற
    வல்லமைக்கு எந்தன் வாழ்த்து!!
    பரிவுடனே சேய்காக்கும் தாயாக விளங்கும்
    பவளசங்கரி எழுதுகோலை வணங்கி
    பரிவட்டம் என சூழும் படைப்பாளர்கள்
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
    கவியரசர்புகழ்பாட கனிந்ததொரு களமாக
    வல்லமையும் விளங்குவதால் இன்னும்பல
    இனியசுவை ஒன்றன்பின் ஒன்றாய்வரும்!
    இத்தகு இலக்கியவட்டத்தால் ஈட்டிய
    நட்புகளும் நான்பெற்ற செல்வங்களாகும்!
    அண்ணாகண்ணன் முதல் அணிவகுக்கும்
    வல்லமையாளர்கள் யாவருக்கும்.. இனிய
    புத்தாண்டு வாழ்த்துகள்..

    காவிரிமைந்தன்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல் சென்னை 600 075
    00971 50 2519693
    kaviri2012@gmail.com
    http://www.thamizhnadhi.com

  2. வல்லமைப் புத்தாண்டு அறிக்கையில் எனது விஞ்ஞான, இலக்கிய, நாடகப் படைப்பு களைப் பற்றி எழுத மறந்து விட்டீர்களே, பவளா.

    சி. ஜெயபாரதன்.

  3. அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா,

    தவறுக்கு வருந்துகிறேன். இப்போது இணைத்துவிட்டேன். மிக்க நன்றி.

  4. துவளாது தொடர்ந்து வளர்க‌  வல்லமையில்
    பவளாவின் ஆசிரியப் பணி

  5. “வல்லமை” படைப்பாளிக்கு ஒரு பெரிய நன்றி.
    வல்லமை மிகுந்த அண்ணா கண்ணன் அவர்.

    அதை அம்சமாக நடத்தும் பவளாவுக்கு நன்றி.
    அருமையாக படைக்கும் .படைப்பாளி அவர் .

    தேமொழி .மதுமிதாவுக்கு என் நன்றி
    தேர்ச்சி பெற்ற இரு முத்துக்கள் அவர்கள்

    திறமைப்பெற்ற மேகலா ,பர்வதாவுக்கு என் நன்றிகள்
    தன்னலமில்லாத தொண்டு அவர்களின் லட்சியம்
    .

    கவிஞர் அலை வீசும் காவிரிமைந்தனுக்கு என் நன்றி
    கண்ணதாசன் இசை தான் அவருடைய சுவாசம்

    சகலகலாவல்ல திரு கிரேசி மோகனுக்கு நன்றி.
    செல்லக்கண்ணனின் பல வண்ணங்கள் பார்த்தாலே பரவசம்

    உன்னத படைப்பு தரும் திரு ரவிக்கு என் நன்றி
    உயிருடன் அவர் சித்திரங்கள் பேசும்

    மூத்தத் தலைவர் திரு இன்னம்பூரானுக்கு என் நன்றி
    மூளை முழுவதும் அறிவைக் கொண்ட வித்தகர் அவர்

    உயர் தரமான படைப்புகளை வழங்கும் அறிஞர்களுக்கு நன்றி.
    உன்னதமாக எழுதும் வல்லமையாளர்களுக்கு என் நன்றி

    வல்லமையின் வழங்கி நிர்வாகிகளுக்கும் என் நன்றி
    வந்தனத்துடன் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

    பல அன்பு தோழிகளைக் கொடுத்த வல்லமைக்கு நன்றி
    பாசத்துடன் பழகும் அன்பர்களுக்கும் நன்றி.

    புத்தாண்டை வரவேற்று பல சாதனை புரிவோம்
    புதிய பல கருத்துக்களை அங்கே அள்ளி வீசுவோம் .

  6. அன்பு ஜெயபாரதன் . நானும் உங்களுக்கென்று எழுதிய வரிகளை விட்டுவிட்டேன் , உங்கள் விக்ஞானக்கட்டுரைகளை விரும்பி படிப்பேன் .சில தமிழ் விக்ஞான சொற்கள் புரியாமல் போனாலும் ஆங்கிலத்தில் புரிந்துவிடும்
    உங்களுக்கென்று ஸ்பெஷல் ‘நன்றி ‘ வரிகள் என் தகப்பனார் ஏ ராஜகோபாலன் அடாமிக் எனர்ஜி ஆபீஸுக்கு வந்த பல விண்ணப்பங்களிலிருந்து உங்களை முதலாக தேர்ந்தெடுத்தது என் கடந்த கால ஞாபகம் .

    “விக்ஞானிகளில் கண்டெடுத்த மாணிக்கம் நீங்கள் ,
    விக்ஞான மேதை திரு ஜெயபாரதனுக்கு நன்றி .
    விஷயங்கள் பல .அலசல்கள் பல ,
    விக்ஞான முத்துக்கள் கிடைப்பதும் அரிது
    கட்டுரை கவிதை பல அவரது அளிப்பு
    கச்சிதமாய் இருக்கும் அவரது படைப்பு
    ‘வல்லமைக்கு’ வந்தது மேலும் பெருமை
    வளரட்டும் மேலும் அவருடைய திறமை

  7. வல்லமை செந்தமிழ்ச் சங்கப் பலகை
    வலையினில் குலுங்கும் முத்துச் சலங்கை
    ஆல மரமாய் அதற்குப் பற்பல கிளைகள் 
    ஆணி வேராய்த் தாங்கும் அநேக விழுதுகள்.

    இந்த சங்கப் பலகையில் என் சிறிய படைப்புகளுக்குத் தொடர்ந்து  இடமளித்து வரும் பவளாவுக்கும், பாராட்டிய விசாலத்துக்கும் என்னினிய நன்றிகள்.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *