இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்

visalam

நம் வல்லமையின் நீண்ட கால படைப்பாளரும், வாசகருமான அன்புத் தோழி திருமதி விசாலம் இராமன் அவர்கள் நேற்று (ஜனவரி 26, 2015) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம்.

என்னைப் பற்றி: விசாலம்
http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607928

நான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. நான் கற்றுக்கொண்ட கலைகள்: பாட்டு வயலின், ஹார்மோனியம்; சிறிது காலம் நாட்டியம். பாட்டிலும் வயலினிலும் முன்னுக்கு வந்து, என் அக்கா கலயாணி பாலகிருஷ்ணா பாட, என் வயலின் கச்சேரி எப்போதும் இருக்கும். மற்ற கலைகள், படங்கள் வரைவது, நாடகங்களில் நடிப்பது.

சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகவும் ஈடுபாடு ஆனதால் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று யோசித்து பம்பாய் தமிழ்ச் சங்கத்திலும் பாரதி கலாமன்றத்திலும் அங்கத்தினர் ஆனேன். நிறையப் புத்தகங்கள் படித்துக் கொஞசம் அறிவு வந்தது. ஏதோ சிறு அணிலும் அணை கட்ட ராமருக்கு உதவியது போல், எழுத்தின் மேல் ஆர்வம். பல கவிதைகள் ஆத்ம திருப்திக்கு எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதினேன்.

பரிசுகள்… பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டியில் நிறைய வந்துள்ளன. பாராட்டியவர்கள்… திருவாளர்கள் கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விசுவநாதம், நாடோ டி, கல்கி, ஆனந்தி ராமசந்திரன், சுபஸ்ரீ முதலியவர்கள் என்னை ஊக்குவித்து வெற்றிப் படிகளில் ஏற வைத்தனர். இவர்கள் போல் பல பேர்கள். அவர்களை நான் இன்றும் வணங்குகிறேன். நாடகம் என்றால் எனக்கு உயிர். பல நாடகங்கள் லேடீஸ் கிளப் வழியாக நடித்திருக்கிறேன். ஹிந்தி மொழியில் ஆர்வம் கொண்டு, ராஷ்ட்ரபாஷா ரத்னா வரை படித்து மஹாராஷ்டிராவிலேயே இரண்டாவது இடம் வந்து மெடலும் புத்தகப் பரிசும் வாங்கின நாள் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது.

என் ஆசிரியர் தொழில் ஆரம்பித்தது என் 16 வயதில். அது தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. அது தான் என் golden period. மற்ற பொழுதுபோக்குகள்: astrology, numerology, palmistry, namalogy and vastu. என் அப்பா தான் என் குரு என் 45 வயதிலிருந்து கற்றுக்கொண்டவை… reiki grandmaster, pranik healing, magnified healing, gayatri healing, siddha sakthi, alpha mind power…., art of living.., isha yoga, mnavalakalai…, flower therapy, homeopati and sujok therapy (accupressure).

தற்போது ரேக்கி கிளினிக்கில் ஹீலிங் செய்து வருகிறேன் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு, சமூக சேவையும் முடிந்த வரை செய்கிறேன் அன்னையும் பாபாவும் என் மூச்சில் எப்போதும் இருக்கிறார்கள். என் வாழ்க்கை முழுதும் நிறைய miracles. அந்த இறைச் சக்தியால் தான் எனக்கு எல்லாமே நடந்து வருகிறது. நான் அன்பினால், அன்புக்காக, அன்புடன் வாழ்கிறேன். அன்பே கடவுள்! அன்பையே அள்ளித் தருவோம் வாருங்கள்.

என் வலைப் பதிவு: http://meerambika.blogspot.com

தமிழ் சிஃபியில் அவர் எழுதிய சில கட்டுரைகள் வருமாறு:

http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607931
http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14722026
http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14729138
http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14736647

சென்னை ஆன்லைனில் வெளிவந்த அவரது கட்டுரைகள் சில இங்கே – http://tamil.chennaionline.com/tamilcolumn/index2.aspx?CatID=visal

 கடைசியாக 2015 ஜனவரி 19 அன்று நம் வல்லமையில் அவர் எழுதிய படைப்பு வெளியாகியுள்ளது. இது வரை வல்லமையில் அவர் எழுதி 187 ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. அவை இங்கே – http://www.vallamai.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

தகவல் – திரு அண்ணாகண்ணன்

திரு ராமன் அவர்களை 8695969237 என்கிற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
வீட்டு விலாசம் H 2015, 5 th Street, 12 th main Road, Anna Nagar West Chennai

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

3 Comments on “இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்”

 • கவிஞர்.காவிரிமைந்தன்
  காவிரிமைந்தன் wrote on 27 January, 2015, 8:40

  அன்பின்திலகமாய் அவனியில்வாழ்ந்து
  அருமைநற்குணம் ஆயிரம்அணிந்து
  பெருமைமிகுந்திடும் வாழ்வினைக்கடந்து
  இறைவனடியினைச் சேர்ந்தனையோ?
   
  எழுத்தின்வலிமை யாதெனஉணர்ந்து
  அழுத்தம்திருத்தமாய் அதையும்வழங்கி
  பழுத்த எழுத்தாளாராய் பவனிவந்தீரே..
  தொழத்தக்க வேள்வியாய் கொண்டீரே!
   
  வல்லமை வாயிலாய் அறிந்தநல் இதயம்!
  வாழிய வாழிய என வாழ்த்திசை பாடும்!
  கவிதைக்கோமகன் கண்ணதாசன்பற்றி – இரு
  கட்டுரைக்கோலங்கள் வரைந்தபூமகள்!
   
  கவிஞரும் அங்கே நேரில் வந்தார் என்று
  கற்பனை வடிவம் உருகித் தந்தார்!
  அற்புதம் யாதெனின் அதுவே முதல்பரிசு
  சொற்களை ஈண்டுநான் பரவிப் பார்க்கிறேன்!
   
  நேரில்பழகிய பழக்கம் அல்ல..
  நெருக்கம் தமிழால் விளைந்தது அன்றோ?
  வல்லமை இதழில் கடைசிப்பதிவு
  ‘நாட்டைக் காப்போம்’ என்பதைப் பாரீர்!

  குடியரசு தினத்தில் இன்னுயிர் பிரிவு!!
  விசாலம்ராமன் மறைந்தது கேட்டு.. நம்
  மனதில் தோன்றிய அதிர்வுகள் அதிகம்!
  எல்லோர் மனதிலும் சூழ்ந்தது கவலை..
  இவர்போல் ஒருவர் காண்பது அரிது!

  இதயம்கனத்து விழிநீர்த்துளிகளுடன்..

  காவிரிமைந்தன்

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 29 January, 2015, 3:21

  நெருநல் உள​ரொருவர் நீத்தார் இன் றென்னும்
  சிறுமை உடைத்திப் பிறப்பு.

  நேற்றிருப்போர் இன்றில்லை; இன்றுள்ளோர் நாளைக்கு
  வீற்றிருப்ப ரா நீ விளம்பு !

  குடியரசு தினத்தன்று விடுதலை அடைந்த மூதாட்டி, படைப்பாளி திருமதி விசாலம் ராமன் நாட்டுக்கும், வல்லமைத் தமிழ் வலைக்கும் ஓர் இழப்பு.  அவரது இனிய எழுத்தும், எளிய படைப்பும் நம் இதயத்தை விட்டு என்றும் நீங்கா.

  சி. ஜெயபாரதன்

 • திவாகர்
  திவாகர் wrote on 31 January, 2015, 11:47

   விசாலம் அம்மா சமுதாயம் நல்வழியில் செல்ல நிறைய சேவை செய்பவர். இவர் இழப்பு மிகப் பெரிய இழப்பாகும். ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த நல்ல ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

  அன்புடன்
  திவாகர்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.