திருமதி வசந்தா குகேசன் மறைந்தார்

அண்ணாகண்ணன்

வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது.

Vasantha_Gukesan_631x455

திருமதி வசந்தா குகேசன், சமையல் கலையில் 50 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகைச் சமையலிலும் கைதேர்ந்தவர். வல்லமையின் சமையல் கலைப் பகுதியில் அவரது பற்பல சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/samaiyal/archives/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

திருமதி வசந்தா குகேசனின் மறைவு குறித்து, இன்றைய தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியான விளம்பரம் இங்கே – http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16582878&code=8208

Vasantha_Gukesan_obituary

திருமதி வசந்தா குகேசன் அவர்களின் மறைவுக்கு வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரை இழந்து வாடும் பவளசங்கரி மற்றும் அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.  திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

About the Author

has written 120 stories on this site.

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.

11 Comments on “திருமதி வசந்தா குகேசன் மறைந்தார்”

 • கீதா மதிவாணன் wrote on 24 February, 2015, 13:58

  ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். 

 • Jeyaramasarmaa wrote on 24 February, 2015, 16:12

     அன்புத் தாயாரை இழந்து தவிக்கும் வல்லமை ஆசிரியர் பவளசங்கரி
  அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், ஆழ்ந்த அனுதாபங்களைத்
  தெரிவிப்பதோடு .. அவரின் அன்னையாரின் ஆன்மா என்றும் சாந்திய்டைய்
  இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

      ஜெயராம சர்மாமாவும், குடும்பத்தாரும்
           மெல்பேண்

 • Shenbaga jagatheesan wrote on 24 February, 2015, 19:21

  ஆழ்ந்த இரங்கல்கள்..
  ஆத்மா சாந்தியடையட்டும்…!

 • சி. ஜெயபாரதன் wrote on 24 February, 2015, 23:30

  தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
  சேய் காணும் முதல் தெய்வம் தாயே.
  தாயிக்கு இணை வேறில்லை.

  தாயை இழந்த பவளாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

  சி. ஜெயபாரதன்

 • கே.எஸ்.சுதாகர் wrote on 25 February, 2015, 5:59

  ஆழ்ந்த கவலையத் தெரிவிக்கின்றேன். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 • அமீர் wrote on 25 February, 2015, 8:46

  குடும்பத்தாருக்கும், பவள சங்கரி அவர்களுக்கும் ஆறுதலும், அன்னையரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

 • Meenakshi Balganesh wrote on 25 February, 2015, 11:14

  பவளசங்கரி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  மீனாட்சி பாலகணேஷ்

 • மு​னைவர் சி,​சேதுராமன் wrote on 25 February, 2015, 21:05

  அன்​னையா​ரை இழந்து வாடும் பவளசங்கரி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்க​​லைத் ​தெரிவித்துக் ​கொள்கி​றேன். அன்​னையாரின் ஆன்மா சாந்திய​டைய இ​றைவ​னை ​வேண்டுகி​றேன். மு​னைவர் சி.​சேதுராமன்.

 • ருத்ரா இ.பரமசிவன் wrote on 16 March, 2015, 11:06

  அன்பின் பவள சங்கரி அவர்களே

  தங்கள் அன்னை அவர்கள் மறைந்த செய்தி இன்று தான் என் கண்ணில் பட்டது.என் ஆழ்ந்த இரங்கலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கிறென்.

  அம்மாவுக்கு
  ஆயிரம் கவிதைகள்
  எழுதலாம்.
  எழுதுகின்ற 
  சொட்டு மைக்குள்
  சோதிக்கடல்கள்
  கோடி கோடி.
  அத்தனையும்
  அன்பு அன்பு அன்பு..
  அன்பைத்தவிர 
  வேறொன்றுமில்லை.

  ========================================
  அன்புடன் ருத்ரா

 • புனிதா கணேசன் wrote on 7 April, 2015, 2:10

  ஆழ்ந்த இரங்கல்கள்
  – அம்மாவின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது
  -அம்மாவின் ஆத்மா சாந்திக்கு என் பிரார்த்தனைகள்

 • வேதா. இலங்காதிலகம். wrote on 8 April, 2015, 1:44

  ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். 

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.