images (1)

பகவான் ஸ்ரீரமண மஹரிஷியின் ஆராதனையை முன்னிட்டு…..
பகவான் உவாச
——————————
’’சித்தப்பா வீட்டில்நான், செத்தப்பா ஆனதும்,
முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை, -வத்தாத,
ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை,
சாவதனில் கண்டேன் சுகம்’’….

’’வந்தது சாவு, வரட்டுமே சாவென்றால்,
எந்தஎது சாகிறது என்றவினா, -தந்த,
பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
களத்தில் இறந்தது கூற்று’’….

’’வந்த இறப்பை, வரவேற்று வாசியின்றி,
அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய், -இந்த,
உடலை எடுத்து, சுடலை நெருப்பில்,
விடுவதைப் பார்த்தேன் வியந்து’’….
’’உடல்போன பின்பும், உயிர்போன பின்பும்,
கடல்போல என்னிருப்பைக் கண்டேன், -மட’நான்’போய்,
தான்குவித்த குப்பையை, தானே களைந்தது,
நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….கிரேசி மோகன்….
————————————————————-
’’சொக்கப்ப நாய்க்கர், மதுரைச் சந்தில்இ,
லக்கம் பதிணொன்னில் லீலையாய், -மிக்கதோர்,
அச்சமாம் காலனை, துச்ச மெனவுதைத்த,
அச்சிறுவன் தாளே அரண்’’….கிரேசி மோகன்….
———————————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *