மீ.விசுவநாதன்

images (1)

“உள்ளும் புறமும் உயர்ந்த ஒழுக்கத்தைக்
கொள்ளும் மனிதன் குணவா னெனவே

உலகம் அழைக்கும் ; உதடும் மனமும்
கலக மிலாமலே காதலில் தோய்ந்து

குருவியைப் போலக் குறுக்கும் நெடுக்கும்
துறுதுறு வென்றே துணிந்து திரியணும் ;

மானம், மரியாதை, வாக்கிலே இன்னமுதம் ,
தானம், தவமென தர்மத்தின் பாதையிலே

நாளும் நடந்திட ஞானம் வரவேண்டும் ;
வாளைச் சுழற்றியே வாய்ச்சண்டை போட்டென்றும்

ஊரும் உலகமும் ஒட்டாமல் போகின்ற
பேரை எடுக்காத பிள்ளையாய் வாழணும் ;

சாதி மதமென சத்தில்லா எண்ணத்தில்
மோதி அழியாமல் மோனத்தின் உச்சத்தில்

அன்பும் அறிவும் அழகாகக் கைகோர்த்து
இன்பமாய் எந்நாளும் ஏற்றமுடன் நன்றாய்

ஒளிரணும் ; கல்வியில் ஒங்கணும் ; நட்பு
துளிரணும் ; மக்கள் தொகையினை பண்பு

நெறியினால் ஆளனும் ; தீய கனவைக்
குறியாய்ப் பொசுக்கணும் ; கொள்ளை அடிக்கிற

கூட்டம் திருந்தணும் ; கோடி சனங்களும்
நாட்டை மதிக்கணும் ; சாத்திரம் என்பதே

சத்திய வாழ்வென சந்ததி கொள்ளணும் ;
கத்தியும் ரத்தமும் காணாமற் போகணும் ;

நாம்போன பின்னாலே நம்மை நினைக்கவே
ஆம்புள பொம்புள அத்தனை பேருமே

உத்தம சாதியாய் ஊரெல்லாம் ரொம்பணும்;
புத்தியே நன்மை புரி. (05.04.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *