-ரா.பார்த்தசாரதி

நமது நாட்டின் முதுகெலும்பே   விவசாயம்
அதனைத் தொழிலாகச் செய்பவன் விவசாயி
இறைவன் கண்டெடுத்த சிறந்த உழைப்பாளி
மக்கள் பசிதீர்க்கும் உலகின்  பாட்டாளி !

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
விவசாயியை  ஏமாற்றுபவர்களை  நிந்தனை செய்வோம்
நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடும் விவசாயி,
அவர்கள் நலம்கெட வழி செய்தல் நியாயமா?

விவசாயம் செய்யமுடியாமல் வெறுத்துத் தற்கொலை
இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அவலநிலை
பேருக்காக உதவித் தொகை என்ற  மான்யம்,
அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நடத்தும் நாடகம்!

விவசாயம்  பாடுபட்டுப் பலன்பெறாமல் இருக்கின்றதே
கூறுபோட்டு வீடுகட்டும் நிலைமை மாறிவிட்டதே!
அரசாங்கமும் அரசியலும் இதற்கு ஒத்துழைக்கின்றதே
விவசாய நிலங்கள் முழுதும் அழிக்கப்படுகின்றதே!

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார் வள்ளுவர்
விவசாயையும் தொழிலாளர்களையும் முன்னேறச் செய்வோம்
உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுப்போம்
நல்மனம்கொண்டுப் பறைசாற்றிடுவோம் உலகத் தொழிலாளர் தினத்தில்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *