நாகினி

 

சென்ற காலத்து துயரம் நினைந்து
வருங்காலத்து விளைவின் பயம் கொண்டு
நிகழ் காலத்து இன்பங்களைச்
சோக இருளாக்குதல் மனித இயல்பு…

நிகழ்கால நிகழ்வை ரசித்து இன்பமாய்
வாழ்வை மாற்றிக் கொள்வதும்
நொந்து வாழ்வைத் தூற்றிக் கொல்வதும்
உலகியலில் விரும்பி நடக்கும் மனித இயல்பு…

இரட்டை வேடதாரி மனிதன்
சோக இருளிலும் நகைப்பான்
மகிழ் இன்பத்திலும் அழுவான்
நேரத்திற்கேற்ப மாறும்மனமே மனித இயல்பு…

மாறும் மனத்தால் துயர் கழித்து
சமூகநலனின் ஏற்றம் பெருக்கி
பிறரை வழிநடத்தும் நேர்மை பண்பைக்
கடைபிடித்தல் மாமனித இயல்பு…

மாமனிதனாய் உயர்ந்து
மனத் துயர்களை உடைக்கும்
மனிதன் …மனிதன்…
இவனே மாமனிதன் என்றே மதிக்கும்
நிலைத்த நேர்வாழ்வு நடைபோடுதலே
தெய்வப் பிறவியாக உயரும் மனித(த்தின்) இயல்பு!

— நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனித இயல்பு!

  1. //மாறும் மனத்தால் துயர் கழித்து
    சமூகநலனின் ஏற்றம் பெருக்கி
    பிறரை வழிநடத்தும் நேர்மை பண்பைக்
    கடைபிடித்தல் மாமனித இயல்பு…//

    அன்புச் சகோதரி நாகினி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!  இத்தகைய ஒரு மனிதனாக ஒவ்வொருவரும் மாறும் நாள் நோக்கி நகர்வோம் என்ற நம்பிக்கையை இந்த இனத்திற்கு விதைத்ததற்கு!

    ஆனால், புறச்சூழலில் அகப்பட்ட மனிதன், மீள முடியாமல் தவிக்கின்றானோ என்ற ஐயம் எனக்கு உண்டு!

    நம்பிக்கை நம் இருகைகளயும் நிச்சயம் உயர்த்தும்!

    அன்புடன்
    சுரேஜமீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *