-துஷ்யந்தி, இலங்கை

பெண்ணென்று பிறத்தல்
பெரும் பாக்கியமாம் பூமியிலே
நானும் பிறந்தேன் பெண்ணாக…

ஆசைகளோடு மலர்ந்தேன்
அரும்புகளாக எண்ணங்களை
என்னுள்ளே வளர்த்தேன்…
புரிந்துகொள்ள இப்பூமி
ஏன் தவறிப்போனதோ…?

பெண்பார்க்கும் படலங்கள்
எத்தனை என் வாழ்விலே…!
வந்தவரெல்லாம் என்
வதனத்தைப் பார்த்தார்களா?
சீர்வரிசைக்கான பண
அடுக்குகளையே பார்த்தார்கள்
பணத்திற்காய் விற்கப்படும்
பொருளாகினாளா பெண்..?
இல்லை சீர்வரிசை கொண்டுவரும்
லொத்தர் சீட்டாகவே பெண்..!

காலங்கள் என்னைக்
கனியவைத்ததால் முதிர்கன்னியாய்
முழுமையடையாப் பெண்ணாய்!

பணத்தைப் பார்க்கும் ஆண்களோ
அழகிய மனத்தைப் பார்க்கவில்லையே!
குணம் இருக்கும் பெண்களும்
இன்று மணம் இல்லாப் பூக்களாய்..!

தேனாய்ப் பேசி தேநீர் சுவைத்து
வேண்டாம் என்று வார்த்தை சொல்லி
ஊரார் மத்தியில் தாழ்த்தும்
முறைமாறா ஆடவர் உலகிலே
நடமாடும் வரையில் பெண்கள்
வலியை ஏற்பது விதி
காலம் செய்த சதி
அதுவே மரண வலி..!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *