எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2 யாருமில்லை நான்

0

[1830 -1886]

aemi
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2
யாருமில்லை நான்

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

யாரு மில்லை நான் ! நீ யார் ?
யாருமில் லையா நீயும் ? ஆகவே
நாம் ஜோடியெனச் சொல்லாதே !
நாடு கடத்துவர் நம்மை, தெரிந்து கொள்.

எப்படிப் பயமளிக்கும் சிலராய் இருத்தல் ?
எப்படிப் பொதுத் தவளை போல் இருத்தல் ?
ஒருநாள் முழுதும் உன்பேர் சொல்வது
சேறு பூசிப் போற்றுவது போலாகும் !

++++++++++++

“I’m nobody! Who are you?
Are you nobody, too?
Then there’s a pair of us—don’t tell!
They’d banish us, you know.

How dreary to be somebody!
How public, like a frog
To tell your name the livelong day
To an admiring bog!”

― Emily Dickinson, The Complete Poems

வாழ்க்கை

வெற்றி இனிக்கிறது வெகுவாக
தோல்வி என்றும் அடைவோர்க்கே !
அமிழ்தச் சுவை உணர்ந்து கொள்ள
பெரும் புண்பட் டிருக்க வேண்டும் !

வெற்றிக் கொடி தனைப் பெற்று
இன்று நிலை நாட்டியவர் எவரும்
விளக்கிச் சொல்ல இயலாது
தெளிவாய் வெற்றி யாதென !

தோற்று வீழ்ந்து மரிக்கின் றவன்
கேளாத காதில் தெளிவாய் விழாது
வெற்றியின் நீண்ட மெய்வருத்த
மனத்துயர் இடர்கள், முறிவுகள்.

++++++

Life

I

SUCCESS is counted sweetest
By those who ne’er succeed.
To comprehend a nectar
Requires sorest need.

Not one of all the purple host 5
Who took the flag to-day
Can tell the definition,
So clear, of victory,

As he, defeated, dying,
On whose forbidden ear 10
The distant strains of triumph
Break, agonized and clear.

CONTENTS · BIBLIOGRAPHIC RECORD

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *