கலங்கரை விளக்கு ஒளியிழந்தது!

2

APJ Abdul Kalam Rare Pic - ATK

ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவச் செல்வங்களுடன் ஒரு கருத்தரங்கில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நம்முடைய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி, ஒளியூட்டிக்கொண்டிருந்த தீபம் நம்மை விட்டு விலகியது தாங்கொணாத் துயரம் அளிப்பது. கனவு காணுங்கள் என்று இளைய சமுதாயத்தினரை ஊக்கப்படுத்திய  ஐயா இப்படி எங்களை தவிக்கவிட்டு செல்ல எப்படி மனம் வந்தது…

டாக்டர் கலாம் அவர்கள் நம் இந்தியத் திருநாட்டின் 11வது குடியரசுத் தலைவராக,  2002 முதல் 2007 ம் ஆண்டு வரை தன்னலமற்ற தொண்டு புரிந்தவர். ராமேசுவரத்தில் அக்டோபர் 15, 1931 இல் ஒரு படகுக்காரருக்கு மகனாக அவதரித்தவர். கலாம் அவர்கள் பத்மபூஷன், பாரத ரத்னா ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கலங்கரை விளக்கு ஒளியிழந்தது!

  1. வீணை வாசிக்க விருப்பம் கொண்டு, அதில் தேர்ந்த பயிற்சியும் பெற்ற பாரதரத்னாவை நல்ல படத்தோடும்,கருத்தோடும் பதிவு செய்திருக்கிறீர்கள்.நன்றி.
    அன்பன்
    மீ.வி.

  2. இந்தியரைக் கனவுகாண் என்றே இயம்பினவர்,

    சிந்தித்துத் தேவர்(அ)தில் சிறந்தவரா எனக்காண
    .
    விண்ணுலகம் சென்றாரோ? விந்தைகள் செய்யாமல்
    மண்ணுலகோர் சோம்பலிலே, மாய வினைகளிலே,
    .
    காலம் கழித்தாரே என்றே கசப்புற்று
    மேலுலகம் சென்(று)ஓர் விண்கலத்தை எடுத்துவர,
    .
    அதன்மூலம் பாரதம்தான் அற்புத வெற்றிபெற
    நிதமெண்ணி அங்கே நீடுதுயில் போனாரோ?
    வாழ்க அப்துல்கலாம்!
    யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *