-வேதா இலங்காதிலகம்

நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,
கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க  vetha

எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்
கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது
உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பிழைக்கும் கவித்துவம்…!

  1. படம் எனது முதலாவது கவிதைப் புத்தகம். 2002ல் வெளியானது.
    102 கவிதைகள் – 176 பக்கங்கள். நூலகம் ஓர்க் ல்
    எனது 3 புத்தகங்களும் உண்டு. மின்னூலிலும் உண்டு.
    முதலாவது புத்தகத்  தொடுப்பு (இணைப்பு) :-
      http://noolaham.net/project/20/1931/1931.pdf 
    இங்கு முன்னுரையில் என்னைப் பற்றி எழுதியுள்ளேன்.
    வல்லமைக்கு நன்றி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *