அன்பின் பகிர்வு

முருகேஷ். மு

இனிய நண்பர்களே…
அன்பின் வணக்கம்.

இத்துடன் இணைத்துள்ள
குழந்தைகளுக்கான போட்டியில்
உங்கள் வீட்டுக் குழந்தைகளும்,
உங்களின் பள்ளி மற்றும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் பங்கேற்க தகவல் பகிரலாமே..!

============================================

அன்புக் குழந்தைகளே,

உங்களுக்கெல்லாம் அப்துல் கலாம் தாத்தாவை ரொம்பவும் பிடிக்கும் இல்லையா? அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? உங்களுக்குப் பிடித்த கலாம் தாத்தாவை ஓவியமாகத் தீட்டவும், அவரைப் பற்றி எழுதவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

கலாம் தாத்தாவை உங்களுக்குப் பிடித்த விதத்தில் வரைந்து அனுப்புங்கள். கற்பனை வளம் மிகுந்த சிறந்த 3 ஓவியங்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி

உங்களுக்குக் கலாம் தாத்தாவை ஏன் பிடிக்கும்? அவர் சொன்னது ஏதாவது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதா? அவர் எழுதியது உங்களுக்குப் பிடிக்குமா? அவரது சாதனை பிடிக்குமா? எது பிடிக்கும்?

‘என் அன்பு கலாம் தாத்தா’ என்னும் தலைப்பில் கலாம் தாத்தாவைப் பற்றி சின்னதாக ஒரு கட்டுரை எழுதுங்கள். அவரை ஏன் உங்களுக்குப் பிடிக்கும்? என்று அதில் எழுதுங்கள். 200 வார்த்தைவரையிலும் இருக்கலாம். சிறந்த 3 கட்டுரைகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

படங்கள், கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: அக்டோபர் – 05, 2015.

அனுப்ப வேண்டிய முகவரி:

மு.முருகேசன், சீனியர் சப் –எடிட்டர்,

தி இந்து தமிழ் – நாளிதழ், 124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை – 600 002.

என்ன தயாராயிட்டீங்களா..? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

About the Author

has written 8 stories on this site.

இவரின் இயற்பெயர் மு முருகேசன். எழுத்துக்காக மு முருகேஷ் ஆனவர். பெற்றோருக்காக இவர் படித்தது தொழில் நுட்பவியல்(DME). ஆனால் விரும்பிப் படித்ததோ தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கியத்தில் முதுகலை இள முனைவர் (MA MPhil)பட்டம் பெற்றவர். புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இலக்கிய இணை வெண்ணிலா அவர்களுடன் தற்போது வசிப்பது வந்தவாசியில். கால் நூற்றாண்டுக்கு மேலாக இவர் இலக்கிய செயல்பாடுகளில் தொடர்ச்சியாக பங்களித்துவருகிறார். இதுவரை பதினைந்து நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது யுரேகா கல்வி இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். சமீபமாக குழந்தை இலக்கியம் படைப்பதில் மிகுந்த மன நிறைவு கொள்கிறார்.

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.