சிரிங்க

செருப்பால் அடித்தின்னா செய்தவர் நாண
சிரிப்பால் அடித்துநன்மை செய்யும், -பொருப்பால்
உயர்ந்த மனிதன் உருவாக வாய்ப்பு
அயர்ந்திடா(து) ஹாஸ்யம் அணி….

(OR)—————————————————, -பொருப்பால்
திருக்குறள் ஆவாய், திருவ்வருணை ஆவாய்,
கருப்பொருளாய் ஹாஸ்யத்தைக் கொள்

பத்தினி சொல்லியும் பெய்யா மழைசிரிப்பால்,
சித்திரையில் சோவென்று ஜில்லாக்கும்: -பித்தன்போல்,
கிச்சுகிச்சு மூட்டினாலும், கேலியேதும் செய்யாது,
வச்சுக்க, வையாதே WIT….கிரேசி மோகன்….

நகைச்சுவை நாணல் நதிவாழ்வு சீற,
திகைக்கா(து) உறுதியாய் தப்பும்: -பகையாம்
இடுக்கண்வந் தாலென் இரண்டு செவியில்
கடுக்கன் சிரிப்பினைக் கொள்….

 

நகைச்சுவை நாணல் நதிவாழ்வு சீற,
திகைக்கா(து) உறுதியாய் தப்பும்: -பகையாம்
இடுக்கண்வந் தாலென் இரண்டு செவியில்
கடுக்கன் சிரிப்பினைக் கொள் ….கிரேசி மோகன்….

”வாத கபபித்தம், வாட்டும் பழவினைகள்,
ஜாதக தோஷங்கள் ,சீண்டாது, -மோதக
மூஷிக வாகனனால், மூண்ட சிரிப்பிருக்க,
தூஷணையும் தோத்திரம் தான்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *