பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12092287_900704376650429_547000782_n

32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.10.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (33)

  1. kaavalukku bommai erukka
    aazh urakkathil azhagu kuzhandhai
    urnagum pothu kuzhandhai sirithal
    kadavul kuzhandhaiyudan vilaiyaadugiraar
    mudiyai kadavulukku kanikkaiyakki
    kan moodi thoongaiyil 
    kadavul vilaiyaada vanthaaro!

  2. சரியா…

    அம்மா அப்பா அரவணைக்க
         அருகில் இல்லை யென்றாலும்,
    பொம்மைக் காவல் போதுமென்றால்
         பாப்பா தூங்கிடும் பயமின்றி,
    செம்மை யான வாழ்விதுவா
         சிந்தித் துரைப்பீர் பெற்றோரே,
    நம்மை நாளைத் தெருவில்விட
         நாமே வளர்க்கும் பழக்கமன்றோ…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. தாலாட்டு பாட தாய்க்கும் நேரமில்லை 
    கைகோர்த்து விளையாட கூட்டாளி யாருமில்லை 
    அண்ணனோ அக்காவோ யாரோடும் பிறக்கவில்லை 
    விளையாட உன்னையன்றி என்னோடு ஒருவரில்லை 

    அம்மா கொஞ்சம் நவீனமாகி வேலைக்கு சென்றுவிட்டாள் 
    அப்பாவோ செல்வம் சேர்க்க தேசமெங்கும் சுற்றிவிட்டார் 
    காக்கா  கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை 
    அபார்ட்மென்ட் வாழ்க்கையில் அக்கம் பக்கம் ஆட்களில்லை 

    பரப்பரப்பான வாழ்வின் பரிசு இதுதான் கண்ணா 
    கசப்பான உன்ன்மை இதை உணர்ந்துவிடு கண்ணா 
    தனிமையை இப்போதே பழகிக்கோள் கண்ணா 
    தாயின்றி போனாலும் காவலுக்கு நானிருக்கேன் 
    கலங்காதே நீ கண்ணுறங்கு கண்ணா  !! 

    — மீனாட்சி 

  4. படம் வரி 33
    பாதுகாப்பு ஆதரவு

    பாதுகாப்புணர்வின்றிப் பதறும் மனம்
    பக்கமிருப்பதைக் கையிலெடுத்து சூப்பியும்
    பாந்தமாய் அணைத்தும் தேறுகிறது.
    பரிவைத் தானாகப் பற்றுகிறது.
    பொம்மைத் தெரிவுமிங்கு ஐயகோ!
    பயங்கர உருவில்! இது
    பெற்றவர் செயலா! பரிதாபம்!
    பாசம் அன்பு தூரமாகிறது.

    பச்சை மனம் பாதுகாப்புணர்வை
    பற்றும் எதிலும் தேடுகிறது
    பாசத்தை அணைப்பை உருத்தாய்
    பக்கமிருந்து கொடுத்தால் குறையமாட்டோம்;!
    தனைமறந்துறங்குது குழந்தை தனிமையில்
    வினை நிறைந்த உலகில்
    அனைத்தும் நவீனமயத்தால் மழலையும்
    தனிமைத் தீவிலாதரவுத் தேடலில்

    வரிகள் வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்
    10-10-2015

  5.           இலவம்பஞ்சு மெத்தையின் தாலாட்டு
    இனிய வாழ்க்கை
    என்றும் நிரந்தரமாக
    என் மடியில் நீயுறங்க
    என்ன தவம் நான் செய்தேன்?
    தாயின்றி தூங்கும் தங்கமே!
    என்னைப் படைத்த தாவரம்தான்
    உனைக் காண அனுப்பியது!
    எனை வளர்க்க மறந்த
    அடுக்கக இயந்திரங்கள் 
    உனைக் காக்கவும் மறந்து
    பணப் புரட்டல் கண்காட்சியினை
    காணுகின்ற வெறியில்
    தாலோலோ மின்னல் கண்
     இயந்திர பொம்மைக்கு
    மாத ஊதியம் பேசி
    வெகுநாளாகி விட்டதோ!
    மாமன் கொடுத்த தொட்டிலிலும்
    அத்தையின் அன்பு ராட்டினமும்
    சித்தி செய்த கண்மையும்
    சித்தப்பனின் செல்லச் சீண்டலும்
    தாத்தாவின் செல்லமொழியும்
    பாட்டி வைத்த சின்னமணி
    திருஷ்டி கரும்பொட்டும் 
    சின்ன பாப்பாவின் மழலைக் கை
    உனைத் தட்டி உறங்க வைக்க
    இன்னொரு தலைமுறை
    பின்செல்ல வேண்டுமம்மா!
    மின்னல் பொம்மையின்
    கண்களில் தெரியும்
    விளக்கு ஒளிகூட
    உன் கைவளை காப்புக்கு
    பாதுகாப்பு பகர்ந்திடுமோ!
    மாயமாய் மறைந்திட்ட
    பூலாங்கிழங்கு வாசனையின்
    முகம் காண பால்காப்பு வளையும்
    கடையில் உன் கை 
    தொடுதலுக்காகக் காக்கிறதே!
    பொல்லா மாய உலகில்
    கணினி யுகத்தில்
    அவதரித்த பொற் சித்திரமே!
    காற்று வீசும் இயந்திரம்
    இன்று மின்சாரத் தடையினால்
    மௌனம் காக்கிறதே!
    இளங்காற்று வீசுகின்ற 
    தென்னை நண்பன்
    வீசிய காற்றில்
    கண்ணுறங்குவாயோ!
    என்னைக் காக்க
    நீயிங்கு என்ன செய்வாய்
    என்றே உரைத்த
    மாமரமும் குளிர்ந்த
    தென்றல் வீசி இங்கு
    உன் கண் இமை காக்க
    பாடியே நீயும்
    கண்ணுறங்குவாயோ!

  6. ஆசைகளற்ற மாயவெளியில்
    அவன் தூங்குகின்றான்,
    அப்படியே தூங்கட்டும்…..
    அருகிலிருக்கும் கரடிபொம்மை
    வெறும் சாட்சிபூதமாய்……..

    புத்தகச் சுமைகளின்றி,
    வீட்டுப் பாடங்களின்
    அழுத்தஙகளின்றி,
    முதல்நிலையெடுக்க
    முந்தும்குதிரையென்றின்றி,

    தனிப்பயிற்சி வகுப்புகளெனும்
    தாளாச் சுமைகளின்றி,
    இனிய பெற்றோரின்
    வார்த்தை இறுக்கமின்றி
    விளையாடும் களமுமின்றி
    வெறுந்தனிமை துணையாகும்
    நிலையுணரும் வரை
    அவன் தூங்குகிறான்
    அப்படியே தூங்கட்டும்….

    பாலபருவம் முடியும்
    பகட்டு இளமை தரும்
    காதல் மாயக்
    கனவுகளின்றி,
    வேலைதேடி அலையும்
    விரக்தியின்றி…..
    அவன் தூங்குகிறான்
    அப்படியே தூங்கட்டும்…….

    வாழ்க்கை விரட்டுகின்ற
    வறண்ட அனுபவங்களின்றி
    பிள்ளைகள் தருகின்ற
    பெருத்த நட்டமுமின்றி
    நோய்கள் தருகின்ற
    நொந்த மெய்யுமின்றி
    முதியோர் இல்லத்தின்
    முரட்டுத் தனிமையுமின்றி…..
    அவன் தூங்குகின்றான்,
    அப்படியே தூங்கட்டும்..,,,,,….

    இப்போதேனும் தூங்கட்டும்
    இருக்கும் நிம்மதியுடன்
    தப்பாத துணையாக
    தரும் கரடிபொம்மையுடன்

    அவன் தூங்குகிறான்
    அப்படியே தூங்கட்டும்..,

                 “இளவல்” ஹரிஹரன், மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *