மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி

prize3

மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும், சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி முதலாம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் இரண்டாவது சுற்றில் 7 மையங்களில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஜூனியர் பிரிவில் மொத்தம் 21 மாணவர்கள் பங்கெடுத்தனர்.

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி சிறப்பு பரிசாக ரூபாய் 5,000 மும்,சான்றிதழும் வெற்றி பெற்றார்.இப்போட்டியானது சென்னையில் நடைபெற்றது. மாணவியின் தாயார் இதுவரை காரைக்குடியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை.

எனவே நியூஸ் 7 தொலைக்காட்சியின் செலவில் இவரது தாயார், ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்ப்பவர். தந்தைக்கு நல்ல வேலை இல்லை.

இந்த சூழ்நிலையில் ஆசிரியர் உதவியுடன் ( அரசு விடுமுறை அன்று) இம்மாணவி சென்னை சென்று அங்கு வந்திருந்த தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியும் இது போன்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் கலந்து கொண்டது இது தான் முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

prize

prize2

முதன் முதலாக நடைபெறும் போட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூபாய் 5,000 வெற்றி பெற்றது பாராட்ட வேண்டிய ஒன்று.இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி.மேடையில் தனது மகள் பரிசு வாங்குவதைப் பார்த்த தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

prize4

பள்ளியில் காலை வழிப்பாட்டு கூட்டத்தில் சான்றிதழையும் ,பரிசுத் தொகையும் மாணவியைப் பாராட்டி கொடுத்த போது அவரது தாயார் இது வரை சென்னை வரை செல்லாத என்னை விடுமுறை நாளன்று அழைத்துச் சென்று நல்லபடியாக அழைத்து வந்த ஆசிரியைக்கும்,மிகப்பெரிய வெளிச்சத்தின் நடுவே மிகப்பெரிய கூட்டத்தின் முன்பாக எனது மகள் பேசுவதையும்,பரிசு வாங்குவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த தருணத்தை எண்ணி இப்பள்ளிக்கும் , நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

பட விளக்கம் :
மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி பரிசு பெற்றபோது எடுத்த படம். உடன் நியூஸ் 7 சேனல் செய்தி பிரிவு ஆசிரியர் திரு.பகவான் சிங் ,நடுவர்கள் நுருல்லா ,கவிதா முரளீதரன்,சம்பத், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், பயிற்சி அளித்த ஆசிரியை திருமதி.முத்து மீனாள் , மாணவியின் தாயார் திருமதி.மீனாள் .

லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
______________________________________________

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

Share

About the Author

has written 225 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.