ajay

பாரசீக மூலம் : உமர் கயாம் ​ரூ​பை​யாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

புத்தாண் டிக்கணம் பழம் இச்சை புதுப்பிக்கும்
சிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும்
மோசஸின் வெண்கரம் விலக்கிடும் கிளை மரம்
ஏசு மகான் தரணி மேல் பெரு மூச்சு விடுவார்

 

4. Now the New Year reviving old Desires,

The thoughtful Soul to Solitude retires,

Where the WHITE HAND OF MOSES on the Bough

Puts out, and Jesus from the Ground suspires.

 

ஈராம் பறவை போனது மெய்யே தன் பூக்க ளோடு
ஏழு வளையக் கும்பா போன தெங்கே என்று அறியார்,
ஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும்,
இன்னும் ஓர் பூங்கா நதிக் கருகில் புயல் வீசும்.

 

5. Iram indeed is gone with all its Rose,

And Jamshyd’s Sev’n-ring’d Cup where no one knows;

But still the Vine her ancient Ruby yields,

And still a Garden by the Water blows.

 

தாவிதின் வாயிதழ்கள் மூடி இருக்க தெய்வீகமாய்
ஊது குழல் உரக்கக் குரல் , “ஒயின், ஒயின், ஒயினென !
கூவிடும் குயில் பூவினைக் கேட்பது, “செந்நிற ஒயின்.”
கன்னியின் மஞ்சள் கன்னம் பொன்னிற மினுக்கம்.

 

6. And David’s Lips are lock’t; but in divine

High piping Pehlevi, with “Wine! Wine! Wine!

“Red Wine!”—the Nightingale cries to the Rose

That yellow Cheek of hers to incarnadine.

​ +++++++++++++++++++ ​

​ ​
தகவல்:

1. http://www.acole.com/novels/timuras/khayyam.html

2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm

3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm

4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam [November 17, 2015]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2

  1. உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 அழகுற தமிழ் நடையில் மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு, சி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி வணக்கம். உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 ஐ , மறுபகிர்வு செய்யவும். வல்லமை மின் இதழ் ஆசிரியருக்கு வேண்டி, விரும்பி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

  2. https://www.vallamai.com/?tag=உமர்-கயாம்-ஈரடிப்-பாக்கள

    என்ற சுட்டி வழியாகவோ … அல்லது பதிவின் கீழே கொடுக்கப்படும் குறிச்சொல் சுட்டியையோ (Tags)
    Tags: உமர் கயாம் ஈரடிப் பாக்கள், ​சி. ஜெயபாரதன்

    சொடுக்கி “உமர் கயாம் ஈரடிப் பாக்கள்” பதிவுகளைப் படிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *