-மீ.விசுவநாதன்

அங்கே பருந்தொன்று பறக்கிறது – அது
அகண்ட வானத்தை அளக்கிறது!
சங்கத் தமிழ்போலச் சிறகடித்து – அது  black-eagle
சத்தம் போடாமல் விரைகிறது !

சிறகை மடல்போல விரித்தபடி- அந்திச்
சிவப்பை அணைக்கத்தான் முயல்கிறது!
பறவை இனத்திற்குப் பெருமைதர -விஷ்ணு
பாத மிரண்டைத்தோள் சுமக்கிறது!

சொந்த இரையெடுக்க நினைத்தாலோ – ஒரு
சுற்றில் சடாரென்று இறங்கிவரும்!
பந்தைக் குழந்தைகள் எடுப்பதுபோல் – நன்கு
பற்றி மேலேறிப் பறந்துவிடும்!

அந்தி நேரத்தில் நதிக்கரையில் – அதை
அறவோர் கும்பிட்டு மகிழ்ந்திடுவர்!
எந்த உயரத்தில் இருந்தாலும் – தன்
இறைவன் பெருமாளை நினைத்திருக்கும்! 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கிருஷ்ணப் பருந்து!

  1. இறைவன் பெருமாளுக்கு கருட வாகனம்
    தேவி கருமாரியம்மனுக்கு சிம்ம வாகனம்
    உமயவள் மைந்தன் திருமுருகனுக்கு மயில் வாகனம்
    இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது
    கிருஷ்ணப் பருந்தை பற்றி கவி வடிவில்
    செந்தமிழில் எழுதியதற்கு பாராட்டுக்கள்
    நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *