7c6913eb-19ee-48fa-a305-58e8c8ecffc5

”இன்றைய கிருஷ்ணன் பார்க்க இராமன் போலிருக்கான்(பசுவை வேறு காணோம்)….நான்
இராமரையும் பார்த்தில்லை, கிருஷ்ணரையும் பார்த்ததில்லை….
பார்த்தது கேசவ்வைத்தான்….அதனால் பெருமாள் துவாதச நாமத்தில்
ஒன்றான ‘’கேசவனுக்கு’’ …..ஓவியம், ஓவியன், ஓவியக் கலை
மூன்றிலும் இருப்பது அவர் ஒருவர்தானே….!

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும்
பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
கட்டிடக் கேட்டிடும் ’’கேசவனே”….(1)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *