பவள சங்கரி

reverse-psych

‘நேர்மாற்று உளவியல்’ அப்படின்னு ஒரு விசயம் இருக்கு தெரியுங்களா..? இது  வெற்றிக்கான ஒரு எளிதான உத்தி. சமீபத்தில் ஒரு கடற்கரையில் ஒரு தேநீர் விற்கும் சிறுவனிடம் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். செம அறிவாளி போல… இந்தப் பையன் இருக்க வேண்டிய இடமே வேறு.. பிற்காலத்துல பெரிய ஆளா வருவாயப்பா என்று வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன்..  அப்படி என்ன செய்தான்னுதானே யோசிக்கறீங்க..? பின்ன என்னங்க.. எல்லோரும் டீ…  டீ…  சாய்… சூப்பர் பால் டீ..  சூப்பர் ஏலக்காய் டீ…..   சூப்பர் இஞ்சி டீ அப்படீன்னு விற்கறத பார்த்திருக்கோம். இவன் மட்டும் ‘படு மோசமான டீ..’ ரொம்ப ரொம்ப மோசமான டீ..’ அப்படீன்னு கூவிக்கொண்டிருந்தான்.  என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்தில் அத்தனை தேநீரையும் விற்று தீர்த்து விட்டான் அந்த சிறுவன். தேநீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் இல்லாத நான்கூட அப்படி என்ன மோசமான டீ, குடித்துதான் பார்க்கலாமே என்று வாங்கிக் குடித்தேன் என்றால் பாருங்கள். இதே உத்தியை சமீபத்தில்  விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பயன்படுத்தி தன் நூல் ஒன்றிற்கு ‘இதை வாங்க வேண்டாம்’ என்று எதிர்மறையாக தலைப்பிட்டு விற்பனையில் சாதனை படைத்தாரே, அது  நினைவிருக்குமே? என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா.. !

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “‘நேர்மாற்று உளவியல்’

  1. பாதி படிக்கும்போதே சிரிப்பு! ரசித்தேன்! 🙂

    இந்த நுணுக்கத்தை இணையத்திலும் பார்க்கிறோமே.  ‘*** இதைப் படிக்கவேண்டாம்,’ ‘***க்கு மட்டும்’ … என்ற மாதிரியான இழைத்தலைப்புகளில் இதைப் பார்க்கலாம்.

    பிடிக்காத அல்லது மறுக்கப்பட்ட ஒன்றை நாடுவது மனித இயல்பு-போல. அண்மையில்தான் உடல்வலிமை மிகவும் குறைந்துவிடவே … நெடுநாள் மனப்போராட்டத்துக்குப்பின் … பிறருக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக முட்டை சாப்பிடத்தொடங்கினேன். இந்த 73-வயதில் முதன்முறையாக முட்டையைத் தொட்டு உடைக்க ரொம்பவே தயங்கி … பெரிய கதை. 

    சிறுவயதிலிருந்தே முட்டை/மீன்/மாமிச வாடையின்மேல் வெறுப்பு. இப்போது முட்டையைப் பயன்படுத்தும் சட்டி, கரண்டிகளைப் பலமுறை கழுவினாலும் … என் மூக்கு அந்த முட்டை வாடையைத் தேடித் தேடிப் பார்க்கிறது … இந்தக் கரண்டியில் முட்டை வாடை அடிக்கிறதா, இந்தப் பாத்திரத்தில் முட்டை வாடை அடிக்கிறதா … என்று !!! நான் வாங்குவது நம்மூர் நாட்டுக்கோழி முட்டைகள் போன்றவை. விலை கூடுதலானாலும் கெட்ட வாடை இல்லாதவை. ஆனாலும் … .

    தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் மலர்ந்திருக்கும் ரோஜா மலர்களின் இதழ்களை இந்தச் சட்டிகளில் போட்டுவைக்க நினைக்கிறேன், ஆனால் மலர்களைப் பறிக்க மனம் வருவதில்லை. அதனால் ஊதுபத்தி கொளுத்திவைக்கிறேன்! கலிகாலம்!

    கடற்கரையில் நீங்கள் எதிர்ப்பட்ட சிறுவனுக்கு உலகவியலின் நுணுக்கம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அவன் திறம் வளர்க!

  2. அன்பின் ராஜம் அம்மா,

    தங்கள் அனுபவத்தை இத்தனை அழகாகப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. உண்மைதான் அம்மா.. அந்தப் பையன் கெட்டிக்காரன் தான்!முட்டை வாடை நீங்க பச்சை வெங்காயம் பயன்படுத்திப் பாருங்கள். வெங்காய வாடைக்கு முட்டை வாடையே தேவலை என்றால் விட்டுவிடுங்கள் 🙂

  3. முட்டை வாடை நீங்க பச்சை வெங்காயம், நல்ல யோசனை. வல்லமையின் கேள்வி – பதில் பகுதியில் பொது என்ற பிரிவைச் சேர்க்கலாம். இதில் யாரும் கேள்வியும் எழுப்பலாம், அதற்கு யாரும் பதிலும் அளிக்கலாம். இதன் மூலம், நமது அறிவையும் அனுபவத்தையும் பகிர்வதோடு, நல்ல கருத்துப் பரிமாற்றம் சாத்தியம்.

  4. அட, வெங்காயமா? பாத்திரம் கழுவவா அல்லது முட்டையோடு கலந்து பயன்படுத்தவா? 

    முட்டையோடு கலக்க என்றால் …  அது மட்டுமா! தக்காளி, பச்சை மிளகாய், ரோஸ்மேரி (rosemary), நம்ம வீட்டுக்கறிவேப்பிலை, கொத்துமல்லி, பார்ஸ்லி (parsley), ஒரேகனோ (oregano) … அப்புறம் … அப்புறம் … வாயில் நுழையாத பெயருடைய மெஃகிகன் (Mexican; Los Chileros; Posole Spice Blend) ஃபிரெஞ்சு (French; I lost the cover so can’t give the name) பொடிகள், மிளகுத்தூள் ஆகிய (உப்பில்லாத) மசாலாக்களுடன் … கண்ணில் காணும் காய்கள் … காளான், குடைமிளகாய், புரொக்கலி, கீரைவகைகள் … எல்லாமும் கைகொடுக்கின்றன. அதி அற்புதமாக ஆம்லெட்டு அமைகிறது! 😉 ஒரு ஆம்லெட்டைத் தயார் செய்ய மற்றவருக்கு 10 மணித்துணியானால் எனக்கு 45 மணித்துளி ஆகிறது — மசாலா + காய்களைத் தயார்செய்ய. 

    ஆனாலும் … பாத்திரங்களைக் கழுவும் நுணுக்கம் இன்னும் பிடிபடவில்லை. வெங்காயம் தடவிப்பார்க்கிறேன்.

    வல்லமையில் கேள்வி-பதில் பகுதி இருக்கா? நல்லது. அண்ணா கண்ணன் சொன்ன மாதிரி அந்தப் பகுதியைப் பார்க்க நேர்ந்தால் எனக்குத் தெரிந்த விளக்கத்தைப் பகிர்ந்துகொள்வேன்.

  5. அட, நல்ல யோசனைதான். அவசியம் செய்யலாமே. வாசக நண்பர்களும் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளலாமே.. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *