பவள சங்கரி

images (2)அதிக கோபம் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நாம் அறியாததல்ல..  ஒருவர் அதிகமாக கோபப்படும்போது அவருக்குள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து உடலினுள் ஒருவகை இரசாயணம் உருவாகிறதாம். இதையும் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். அதீதமான அச்சத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தை எடுத்து  பரிசோதனைக்காக  சோதனைக் கூடத்தில் இருந்த பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோய்விட்டதாம். ஓர் உயிரைக் கொல்லும் அளவிற்கு  பலம் வாய்ந்த இரசாயணம் நமக்குள் எத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? ஆம் அதீதமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் போன்றவைகள்  தோற்றுவிக்கும் இரசாயணம் மனிதனின் உடலையும் உயிரையும் பெரிதும் பாதிக்கவல்லது! என ஆராய்ச்சியாளர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். சுருக்கமா சொல்லணும்னா நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நம் உடலை நல்ல சிலையாகவோ அல்லது பின்னமான உருவமாகவோ அமைப்பது நம் கையில்தான் உள்ளது!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “கோபம் ஆகாதுங்க…!

  1. முற்றிலும் உண்மை…ஒரு வலுவான கட்டிடத்தை ஒரு தீப்பந்தம் எரித்து விடுவதைப்போல கோபம் நம்மை சில நேரங்களில் முற்றும் எரித்து விடுகிறது….

  2. ம்ம்ம் … நல்லதோர் அறிவுரை சொல்லும் கட்டுரை!

    அதென்ன ‘அதிக கோபம்? அப்போ … கொஞ்சமாகக் கோபப்படலாமோ?’அப்போ, கோபத்தை அளக்கும் “உஷ்ணமானி” உண்டோ? 
    ++++++++++
    நெடுநாளாகவே இந்தக் ‘கோவம்’ பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்துக்கொண்டிருக்கிறேன். இலக்கிய/இலக்கணக் கட்டுரைகளின் தலைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறபடியால் இந்த மாதிரி உளவியல் தொடர்பான தலைப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை.

    சுருக்கமாகச் சொல்லப்போனால் … 

    1. நம் இணையமக்களுக்கு … கோவம், வருத்தம், ஏமாற்றம் … ஆகிய உணர்வுகளுக்கு இடையே உள்ள நுண்ணிய வேறுபாடுகளைக் கண்டு சொல்லத்தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.

    2. ஒருவர் (B)  இன்னொருவருக்கான (A) தன் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்கும்போது … அந்த இன்னொருவர் (A) தன் உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்போது … ‘அவருக்கு (B) என்(A)மேல் ரொம்பக்கோவம்,’ ’அவர் என்னைத் திட்டிவிட்டார்’ என்று சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன், எழுத்திலும் பார்த்திருக்கிறேன். அதிலும் … ‘என்னைத்திட்டிவிட்டார்’ என்பதில் ஒரு போலியான ‘தன்னிரக்க’ உணர்வு (self pity) வெளிப்படுவதாக நினைக்கிறேன். 

    3. ஏதானாலும் சரி. முதலில், கோவம் என்ற உணர்வை விளக்கவேண்டும். பிறகு அதன் அடிப்படையையும் வரையறையையும் விளக்கவேண்டும். தொடர்ந்து அந்த உணர்வு எங்கெங்கே எப்படி எப்படி எந்த எந்த வழிகளில் மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதையும் தெளிவாக்கவேண்டும்.
    ++++++++++
    என் நண்பர்களும் சரி, பிறரும் சரி … ‘Don’t worry about it’  என்கிறார்களோ தவிர, ‘What should I do in order to not worry about it?’ என்ற கேள்விக்கு இதுவரை துல்லியமாகப் பதில் சொன்னதில்லை.

    ஆகவே, என் வேண்டுகோள். ‘இது செய்யாதே, அது செய்யாதே’ என்று சொல்வதுடன், இப்போதைக்கு இருக்கும் தொல்லையை (anger) நல்லபடியாகக் கையாள என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் நல்லது.
    ++++++++++

  3. அம்மா உங்கள் நகை – சுவையான பேச்சை மிகவும் ரசித்தேன்… எவ்வளவு நாட்களாகிவிட்டது, நீங்கள் இப்படி பதிவிட்டு!

    அம்மா இதோ இதைப் பாருங்களேன்… பெரும்பாலானவர்களுக்கு, மிகவும் மன உளைச்சலான நேரங்களில் ஏதாவது உணவு உட்கொண்டால், அது ஆறுதல் அளிப்பதாக இருக்கும். இதற்கான முதல் இடம் அரிசி உணவிற்குத்தான். மாவுப் பொருட்கள், மூளையில் சுரக்கின்ற செரோடினின் என்கிற இரசாயனப் பொருள் அளவை அதிகப்படுத்தி, முழு உடலுக்கும் ஒரு அமைதியைக் கொடுக்க வல்லதாம். இதன் காரணமாக மன அழுத்தத்தினால் வரக்கூடிய, கோபம், எரிச்சல் மற்றும் மனதை ஒருநிலைப் படுத்த முடியாத தன்மை போன்றவைகள் மட்டுப்படுத்தப் படுகிறது. இந்த மாவுப் பொருட்களின் சக்தி 2 முதல் 3 மணி நேரம் வரைதான் இருப்பதால் கலோரியின் அளவைக் கவனத்தில் கொண்டு அந்த உணவை 5 அல்லது 6 முறையிலான குட்டி உணவாகப் பிரித்து உண்ணலாம்.

    மொத்த கட்டுரை இதோ இங்கே http://coralsri.blogspot.in/2010/07/blog-post_27.html விரும்பினால் வாசித்துப் பாருங்களேன்.. கொஞ்சம் கோபம் என்றால் எளிதாக மாற்று கண்டுபிடிக்கலாம்.. அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. சில நேரங்களில் கண், மண் தெரியாமல் வரும் கோபம்தான் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியது. அர்த்தமற்ற அந்த கோபத்தை, மன உளைச்சலை விரட்டியடிக்க நாமும் முயல வேண்டும்..

  4. சரியாப்போச்சு, என் அன்பின் பவளஶ்ரீ! மாவுப்பொருட்களிலிருந்து கிடைக்கும் செரெட்டோனின் (Seratonin) சத்து தேவை என்பதை நம் பேலியோ மருத்துவர் செல்வனிடம் எடுத்துச்சொல்லி ஆலோசனை கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் என்னடான்னா … அரிசி சாப்பிடாதே, மாவுப்பொருளை மறந்திடு … என்று சொல்கிறார். நீங்க என்னடான்னா … வேற மாதிரிச் சொல்றீங்க்ளே! 

    எனக்கும் சிலவகை மாவுப்பொருள்கள் பிடிக்கும், வீட்டாருக்காகவும் செய்திருக்கிறேன். ஆனால் கடந்த 30-ஆண்டுகளாக மாவுப்பொருள் பயன்பாடு வீட்டில் மிகவும் குறைவு. ஓஓஒ … அதனால்தானோ இணையத்தில் எனக்குக் ‘கோவக்காரி’ என்ற பட்டம்!! 🙂 அடடா, இப்பொதான் புரிகிறது! 😉

    சரி, பவளஶ்ரீ, இன்னிக்கு என் வீட்டில் அரிசிச்சோறு!

    பகடி நிற்க.

    ++++++++++

    பவளஶ்ரீ, உங்கள் அருமையான கட்டுரையைப் படித்தேன்: http://coralsri.blogspot.in/2010/07/blog-post_27.html 

    பல கருத்துகளைப் பகிர விருப்பம். ‘வல்லமை’யில் ஒரு தனியிழை தொடங்க நினைத்திருக்கிறேன். முடிந்தவுடன் செய்கிறேன். இப்போ வெறு பல வேலைகள்.

    ++++++++++

    இடையில் ஒரு சிறு நல்லனுபவப் பகிர்வு.

    சில நாட்களுக்குமுன் ஒரு தமிழ்க்குடும்பத்தார் என்னைப்பார்க்க வந்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் முதல் இரண்டு பையன்களுக்குப் பிறகு, நெடுநாள் கழித்து, கடைசிப்பிள்ளை ஒரு பெண்குழந்தை, ஒன்றரை வயது. ரொம்பச்சுட்டி. வேளாங்கண்ணிக்குப் போய் முதல் மொட்டை முடிந்து இங்கே வந்தபின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வீட்டிலேயே மொட்டை. ஆக … பளபள என மொட்டைத்தலை, பட்டுப்பாவாடை-சட்டை, வாய்நிறைந்த அழகிய பல்வரிசை, ஓரிடத்தில் உட்காராமல் நிற்காமல் ஓடும் துறுதுறுப்பு; யாராலும் சமாளிக்க முடியவில்லை. என் வீடு 6-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரையற்ற திறந்த வீடு; இங்கே அவர்கள் என்ன அட்டகாசம் வேண்டுமானாலும் செய்யலாம். 

    இந்தக் குழந்தை அங்குமிங்கும் ஓடித்திரிந்து என் வீட்டிலிருந்த பொருள்களை அங்குமிங்குமாக எடுத்துவைத்துக்கொண்டிருந்தது. பெற்றோர் கண்டித்துக்கொண்டேயிருந்தார்கள். நானோ கவலைப்படாதீர்கள் அவள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன். திடீரென்று அந்தக் குழந்தை தன் அப்பாவின் கையைப்பிடித்துக் கடித்துவிட்டது!!! 

    இங்கே வெளிப்பட்ட அந்தக் குழந்தையின் உணர்ச்சி என்ன — கோவமா, வருத்தமா, ஏமாற்றமா? இங்கே யாருக்கு வெற்றி? குழந்தைக்கு வெற்றி என்று நான் நினைக்கிறேன். ‘அப்பனுக்கு அறிவுரை சொன்ன சுப்பனின்’ நினைவு வந்தது.

    இந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கிறேன். 

    ++++++++++
    தனியிழையில் ‘கோவம், நகை’ போன்ற உணர்வுகளைப் பற்றி எழுத விருப்பம். முடிந்தபோது செய்கிறேன். 

  5. அம்மா அவசியம் தங்களுடைய கருத்துக்களை தொடர் கட்டுரையாக பகிர வேண்டுகிறேன். தங்களுடைய ஆக்கப்பூர்வமான அனுபவப் பகிர்வு பலருக்கும் பயன் தரக்கூடியது.
    குழந்தையின் பல நாள் கோபம் போல.. உங்கள் அரவணைப்பு கொடுத்த துணிவில் அப்பாவின் கையைக் கடித்து அதைத் தீர்த்துக்கொண்டுள்ளது. அதன் கோபம் அதோடு தீர்ந்து மனம் இலகுவாகி சிட்டாகப் பறக்க ஆரம்பித்துவிடுகிறது, மீண்டும் புதிதாய்ப் பிறந்து! குழந்தைகளின் இந்தத் தன்மையை மட்டுமே நம்மால் இரசிக்க முடியும் இல்லையா? மன நலம் பாதிக்கப்பட்டவரும் இதே நிலையில்தான் இப்படி நடந்துகொள்வார்கள் இல்லையா.. அப்போது அவர்களைப் பொறுத்தவரை கவலையற்ற, ஆசிர்வதிக்கப்பட்ட மன நிலை இல்லையா? சித்தம் போக்கு.. சிவன் போக்கு என்பதும் இதுதானோ? ஆகா, என்னையும் கூட இத்தனை யோசிக்க வைத்துவிட்டீர்களே.. அதனால்தான் தொடர் எழுதச் சொல்கிறேன் தாயே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *