கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பந்திக்கு முந்துது பாக வதமந்தி,
தந்தருளும் தாமோ தரர்,தனக்கு, -முந்தி(முன்பு),
திரேதா யுகத்தினில், தோளில் சுமந்த,
பிராதா சிவனுக்கே பங்கு’’!….கிரேசி மோகன்….
அனுமான் சிவன் அம்சம்….
இராம இராவண யுத்தத்தில் அண்ணன் தம்பியை தன் தோளில் சுமந்தவர்(ஹனுமத் வாகனம்)….
சிவன் பங்கு சக்தி(வெண்ணை) -தன் சகோதரியை சிவனுக்கு தருகிறார் தாமோதரர்….
பிராதா -பிரதர்(மும்மூர்த்திகளுள் ஒருவர்)….