வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் முனைவர்.காயத்ரி

பவள சங்கரி

வணக்கம் நண்பர்களே. நம் வல்லமை ஆசிரியர் குழுவில் புதிதாக இணையும் முனைவர்.காயத்ரி பூபதி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

bc6f1573-0380-4abd-ab79-0d6648de512d

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஹைதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

உளமார்ந்த வாழ்த்துகள் காயத்ரி. வல்லமையுடன் இணைந்த தங்கள் பயணம் நிறைவாகத் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1158 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

4 Comments on “வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் முனைவர்.காயத்ரி”

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 6 June, 2016, 13:01

  முனைவர் காயத்ரி பூபதி அவர்களை வரவேற்று வாழ்த்துகிறோம். வல்லமையில் அவரது பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

 • Saravanan wrote on 6 June, 2016, 15:17

  Wish you all the best Gayathri
  Do well
  Cheers
  Saravanan

 • தமிழ்த்தேனீ
  Thamizthenee wrote on 6 June, 2016, 19:24

  முனைவர் காயத்ரி பூபதி அவர்களை வரவேற்கிறோம்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 • முனைவர். புஷ்ப ரெஜினா
  DR.M.PUSHPA REGINA wrote on 14 June, 2017, 15:09

  முனைவர் காயத்ரி பூபதி அவர்களை வரவேற்கிறோம்

Write a Comment [மறுமொழி இடவும்]


six − = 5


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.