பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு

—————————————————————————————

 

வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்

இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)

        காலை ஒளியும் மாலை இருளும் (2)

        உறவும் முறிவும் வருமே மாறியே              (வாழ்வே)

 

 

        சுற்றம் என்ன சூழல் என்ன

                நிலையானதாகுமோ (2)

        சொந்தம் என்ன பந்தம் என்ன

                செல்லாமலே நில்லுமோ?

                        ஒரு நாள் இன்பம் ஒரு நாள் துன்பம்

                        மாறாதே இக் கோலம்              (வாழ்வே)

 

 

        கன்னி என்ன காதல் என்ன

                வண்ணமெல்லாம் மாறுமே             (கன்னி)

        பாசம் என்ன நேசம் என்ன

                வந்து பின்னே போகுமே

                        ஒரு நாள் இங்கே ஒரு நாள் அங்கே

                        எங்கே எந்தன் வீடும்                (வாழ்வே)

 

—————————————————————————-

mani

In 1996 I did a water-colour painting of a tribal woman.
It was displayed in an art exhibition.
A doctor from Germany, who was visiting Canada, 
bought the painting from me.
Fortunately I have a photograph of the painting.
 
 

 

Our life is in constant flux. No one can stop the changes taking place in the body. And old age is inevitable. But there is light at the end of the tunnel!

R.S.Mani

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வாழ்வே இதுதான்!

  1. மூப்பைப் பற்றிய அரியதோர் கொடிய நிகழ்வை, இலை உதிர் மரக் காட்சியாகக் காட்டி வசன கவிதையில் கூறுவது உள்ளத்தையும் ஆத்மாவையும் தொடுகிறது.

    இலையுதிர் மரமும் மனிதர்
    நரையுதிர் காலம் காட்டும்.
    கடந்து சென்ற காலம்,
    நடந்த வந்த நரகம் காட்டும்.
    நரை உதிர்ந்த இடத்தில்
    விதை ஒன்று முளைத்துக்
    கதை ஒன்று கூறும்.
    கவி ஒன்று பிறக்கும்.

    பாராட்டுகள் நண்பர் ஆர். எஸ். மணி அவர்களே.

    சி. ஜெயபாரதன்

  2. மயிலிறகால் வருடி, மனத்தை மயக்கும் தங்கள் குரலை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி. எழுத்து, இசை, ஓவியம், பேச்சு, ஒளிப்பதிவு என யாவும் ஒன்று கலந்த இந்தப் பல்லூடகப் பதிவு, தமிழ் இணைய வரலாற்றில் ஒரு முன்னோடி முயற்சி. தமிழ் சிஃபிக்குப் பிறகு வல்லமைக்கு அந்த வாய்ப்பு அமைந்ததில் பெருமை.

  3. அன்புள்ள ஜெயபாரதன், அண்ணாகண்ணன் !
    உங்கள் அன்பான வார்த்தைகள் மூப்பின் வேதனைக்கு மருந்தாய் உள்ளன!
    மிக்க நன்றி!!
    —ஆர்.எஸ்.மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *