”MIRA KE PRABHU”
———————————–

kesav

’’கிரிதரன், கோபாலன், காற்றினிலே கீதன்,
கரிதரன், மீராவின் காதல் -வெறிதரன்,
வெண்ணை உறிதரன், வீரம் புரிதரன்(பாரதப் போர்)
கண்ணன் சிரிதரன்(ஸ்ரீதரன்) காண்’’….கிரேசி மோகன்….!

“காதலுக்குக் கண்ணில்லை, கண்ணனின் பக்திக்கண்
காதலி மீராவை கண்டுகொள்ள:-ஆதலினால்
காதலிப்பீர் கண்மூடி காற்றிசைக்கும் கீதத்தை;
யாதுமான யாதவனே யாப்பு”….!

யாப்பு-Grammar….

“மறைந்திருந்து பார்க்கின்றாள் மர்மமாக மீரா,
கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….

மஞ்சு-மேகம்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *